தங்கம் விலை அடுத்த வாரத்தில் எப்படியிருக்கும்.. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், வாரத்தின் இறுதியில் கிடுகிடு ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

 

கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, கடந்த சில தினங்களாகவே மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

எனினும் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகரிக்கும்பட்சத்தில் 1760 டாலர்களையும் உடைக்கவில்லை. இதே சரியும்போது 1660 டாலர்களையும் உடைக்கவில்லை. இதற்கிடையில் இந்திய சந்தையில் கடந்த வாரத்தில் மட்டும் 2 நாட்கள் விடுமுறை. ஆக இதன் ஒட்டுமொத்த எதிரொலியும் நாளை சந்தை தொடக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இந்தியாவில் தொடர்ந்து பிசிகல் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து மீண்டும் வந்து கொண்டிருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் குறித்தும் கவலை இருந்து வருகிறது. எனினும் அதிகரித்து வரும் தேவை, மற்றும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தேவையே மீண்டு வந்து கொண்டு இருந்தாலும், அது எந்தளவுக்கு நீட்டிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? வெள்ளியின் விலை நிலவரம் என்ன? கடந்த வாரத்தில் குறைந்திருக்கா அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

COMEX தங்கம் விலை நிலவரம்
 

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டாலும், மொத்தத்தில் சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1731.50 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1732.60 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று 1728.80 டாலர்களை அதிகபட்சமாக தொட்டு, பின்னர் 1730.45 டாலர்களாக முடிவுற்றது. கடந்த வாரத்தில் குறைந்தபட்ச விலையானது செவ்வாய் புதன் கிழமைகளில் 1676.50 டாலர்களை தொட்டுள்ளது. இதுவே கடந்த வாரத்தில் சப்போர்ட்டாகவும் அமைந்துள்ளது. ஆக வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் முதல் இரண்டு நாட்கள் சரிவில் காணப்பட்டாலும், அடுத்த இரண்டு நாட்கள் பலமான ஏற்றத்தினை கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 25.105 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 25.150 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. எனினும் புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 23.740 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வியாழக்கிழமையன்று முடிவில் 25.030 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் மார்ச் 29, மற்றும் ஏப்ரல் 2 ஆகிய இரு நாட்களும் விடுமுறையாகும். மார்ச் 29 அன்று ஹோலி என்பதால் விடுமுறையாகும். இதே ஏப்ரல் 2 அன்று புனித வெள்ளியாகும். ஆக செவ்வாய்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 44,590 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 44,108 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 45,500 ரூபாயாக அதிகரித்தது. இது தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 900 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,700 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் செவ்வாய்கிழமையன்று, 63,976 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 62,500 ரூபாயாகவே இருந்தது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 65,155 ரூபாயினை தொட்டது. முடிவில் 65089 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 1110 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 12,600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் அதிலும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 33,792 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4278 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,224 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 9,300 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் பெரியவில் மாற்றம் காணவில்லை. இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 46,080 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 46,670 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 69.71 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 697.10 ரூபாயாகவும், கிலோவுக்கு 69,710 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 68,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 69,710 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் திருமண முகூர்த்தம், அறுவடை உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

பத்திர லாபம் அதிகரிப்பு

பத்திர லாபம் அதிகரிப்பு

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், அதிகரித்து வரும், அமெரிக்க பத்திர சந்தையினால், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து காணப்பட்டது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பத்திர லாபமானது 80 அடிப்படை புள்ளிகள் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் மதப்பானது சரிவில் காணப்படுகிறது. இது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தொடக்கமாகும்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு


தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இரு நாட்களாக ஒரே குறைந்தபட்ச விலை சென்று திரும்பியுள்ளது. ஆக இந்த வாரத்திலும் சற்று அதிகரிக்கலாம். இது 1750 டாலர்களை உடைத்தால், இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பலவீனமான பத்திர லாபம், இதனால் டாலரின் மதிப்பு குறையலாம். இது தங்கத்திற்கு ஆதரவாகும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

புதிய தடைகள்?

புதிய தடைகள்?

இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, புதிய தடைகள், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், என்ற கவலையும் நீட்டித்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான ஆர்வம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் நகை விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், கடைகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

நிபுணர்களின்

நிபுணர்களின்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இந்த ஆண்டில் 2200 டாலர்களை தொடலாம் என WELLS fargo கணித்துள்ளது. இதே இன்வெஸ்கோ இந்த ஆண்டில் 1850 டாலர்களை தொடலாம் எனவும், ANZ bank அவுன்ஸூக்கு 2,100 டாலர்களை தொடலாம் எனவும், கோல்டுமேன் சாச்சஸ் 2000 டாலர்களை தொடலாம் எனவும், சிட்டிபேங்க் 1950 டாலர்களை தொடலாம் எனவும், காமர்ஸ் பேங்க், பேங்க் ஆப் அமெரிக்கா 2000 டாலர்களை தொடலாம் எனவும் கடந்த சில மாதங்களில் கணித்தது நினைவுகூறத்தக்கது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price outlook for next week: gold down nearly Rs.10,700 above in record high?

Gold weekly updates.. Gold price outlook for next week: gold down nearly Rs.10,700 above in record high?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X