உச்சத்தில் இருந்து ரூ.9,000 மேல் சரிவில் தங்கம் விலை.. இந்த இடத்தில் வாங்கலாமா.. !

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், வாரத்தின் இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,000 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து முதல் மூன்று மாதம் சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது, மீண்டும் ஏப்ரல் மே மாதங்களில் சரிவினைக் கண்டது. அதன் பின்னர் தற்போது இந்த மாத தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சற்று சரிவில் காணப்படுகிறது.

பெரிய அளவில் மாற்றமில்லை

பெரிய அளவில் மாற்றமில்லை

எனினும் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகரிக்கும்பட்சத்தில் 1795.60 டாலர்களையும் உடைக்கவில்லை. இதே சரியும்போது 1762.95 டாலர்களையும் உடைக்கவில்லை.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று 1764.30 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையான 1762.95 டாலர்களை தொட்டது. இதனிடையில் புதன்கிழமையன்று அதிகபட்சமாக 1795.60 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1781.70 டாலர்களாக முடிவுற்றது. ஆக வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த திங்கட்கிழமையன்று 25.835 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 25.580 டாலர்கள் வரையிலும் சென்றது. இதே புதன்கிழமையன்று 26.370 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. எனினும் வெள்ளிகிழமையன்று முடிவில் 26.183 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,900 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 46,633 ரூபாயினை தொட்டது. இதே புதன்கிழமையன்று அதிகபட்சமாக 47,318 ரூபாயாக அதிகரித்தது. எனினும் முடிவில் 46,925 ரூபாயாக முடிவுற்றது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று, 67,647 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே 66,628 ரூபாயாகவும் சரிந்தது. புதன்கிழமையன்று அதிகபட்சமாக 65,526 ரூபாய் வரை சென்ற நிலையில், முடிவில் வெள்ளிக்கிழமையன்று 67,873 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 9,800 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் 5 நாட்கள் ஏற்றத்திலும், 2 நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4,446 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,568 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,000 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 48,380 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,490 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 734 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,400 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,100 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 73,400 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த இடத்தில் வாங்கலாமா?

இந்த இடத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+