மீண்டும் மளமளவென ஏற்றம் காணும் தங்கம் விலை.. அடுத்த வாரத்தில் எப்படியிருக்கும்.. குறையுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் போகிற போக்கில் உச்சத்தினை மீண்டும் ஹொட்டு விடுமோ? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? பழைய உச்சத்தினை உடைத்து புதிய உச்சத்தினை தொடுமா? நிபுணர்கள் சொல்வதைபோல் மீண்டும் 2,200 டாலர்கள் அல்லது அதற்கு மேல் அதிகரிக்குமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஏனெனில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் அதே நேரத்தில், புதிய வகை கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி.. இதோ முழு விவரம்..! 5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி.. இதோ முழு விவரம்..!

குறிப்பாக இந்தியாவினை பொறுத்தவரையில் மூன்றாவது அலை என்பது அச்சம் கொள்ள வைக்கிறது. வல்லுனர்கள் மூன்றாம் அலை குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டும். இதன் தாக்கம் பெரியளவில் இருக்காது. இரண்டாம் அலையை போன்று மோசமான தாக்கம் இருக்காது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். போட்டு வருகின்றனர்.

மூன்றாம் அலையின் தாக்கம்

மூன்றாம் அலையின் தாக்கம்

எனினும் புதிய வகை கொரோனாவில் இருந்து இந்த தடுப்பூசி மக்களை எந்தளவுக்கு கைகொடுக்கும். மேலும் நாட்டுல் பல கோடி மக்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது தற்போதைக்கு நடைமுறையில் இயலாத ஒரு காரியமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் மூன்றாவது அலையின் தாக்கம் எப்படியிருக்கும். இதனால் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா?

பொருளாதாரம் பற்றிய கேள்விக்குறி

பொருளாதாரம் பற்றிய கேள்விக்குறி

அப்படி அமல்படுத்தப்பட்டால் பொருளாதாரம் என்னவாகும்? இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில் தற்போதைய நிலையில் பல மாநிலங்களிலும் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் இனி வரும் வாரங்களில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

rangeboundல் தங்கம் விலை

rangeboundல் தங்கம் விலை

எனினும் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகரிக்கும் பட்சத்தில் 1800 டாலர்களையும் உடைக்கவில்லை. இதே சரியும்போது 1750 டாலர்களையும் உடைக்கவில்லை. ஆக வரும் வாரத்தில் இந்த இரு விலைகளில் ஏதேனும் ஒரு பக்கம் நிச்சயம் உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் சற்று குறைவது போன்று தோன்றினாலும், மீண்டும் வாரத்தின் பிற்பாதியில் ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1782. டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1750.10 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1795.90 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். அன்றே முடிவில் 1787.55 டாலர்களையும் தொட்டது. ஆக வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் முதல் இரண்டு நாட்கள் சரிவில் காணப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்கள் ஏற்றத்தினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 26.220 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.580 டாலர்கள் வரையிலும் சென்றது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 26.700 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. முடிவில் 26.600 டாலராகவும் முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,965 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,300 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 47,515 ரூபாயினை தொட்ட நிலையில், அன்று முடிவில் 47,285 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8900 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 68,947 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 68,825 ரூபாயாகவே இருந்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 70,360 ரூபாயினை தொட்டது. முடிவில் 70,188 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 7600 ரூபாய் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. எனினும் அதிலும் பெரிய மாற்றம் என்பது இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் இன்று கிராமுக்கு 4,486 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,700 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,440 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,940 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 74.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 749 ரூபாயாகவும், கிலோவுக்கு 74,900 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 74,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,400 ரூபாய் அதிகரித்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் திருமண முகூர்த்தம், விழாக்கள் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நாளை தொடக்கத்தினை பொறுத்து மீடியம் டெர்மில் வாங்கலாம்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

தற்போது நாட்டில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இது தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கலாம். இதனால் தங்கம் விலையானது வரும் வாரத்தில் 1800 டாலர்களுக்கு மேலாக செல்லலாம். தற்போது இந்தியாவில் அடிப்படை இறக்குமதி வரியிலும் சற்று குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்புகள்

நிபுணர்களின் கணிப்புகள்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 2022ல் மீண்டும் 1900 டாலர்களை தொடலாம். இது இந்தியா சீனா மற்றும் இந்தியாவில் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தங்கம் விலையானது நடப்பு ஆண்டிலேயே 2200 டாலர்களை தொடலாம் என WELLS fargo கணித்திருந்தது நினைவுகூறத்தக்கது.

இந்த நேரத்தில் வாங்கலாமா?

இந்த நேரத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price outlook for next week: gold prices in India see choppy week on global cues as delta variant spreads

Gold weekly updates.. Gold price outlook for next week: gold prices in India see choppy week on global cues as delta variant spreads
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X