தங்கம் என்பது 2023ம் நிதியாண்டில் சிறந்த ஒரு முதலீடாக இருந்தது. இந்த போக்கானது நடப்பு நிதியண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
2024ம் நிதியாண்டிலும் தங்கம் நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இது சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான நிலை மற்றும் உச்சத்தில் உள்ள பணவீக்கம் என பல காரணிகளும் இதனை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இலக்கு
இதற்கிடையில் 10 - 15% வரையில் லாபம் கொடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் நிபுணர்கள் தங்கம் விலையானது 66,000 - 68,000 ரூபாய் வரையில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளனர். இந்த இலக்கானது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் எட்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இலக்கு
இதே சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 2078 டாலருக்கு மேலாக நின்றால், 2240 - 2365 டாலர்களை விரைவில் எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்க வாய்ப்பாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரிக்கும்பட்சத்தில் அது, மேற்கொண்டு இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம்.
முக்கிய காரணிகள்
ஆக நடப்பு நிதியாண்டில் போர்ட்போலியோவில் அவசியம் இருக்க வேண்டிய முதலீடுகளில் தங்கமும் ஒன்று எனலாம். குறிப்பாக தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க தூண்டலாம்.
விலை அதிகரிக்கலாம்
இது தவிர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளிடையே நெருக்கடியான ஒரு சூழல் என்பது இருந்து வருகின்றது. இது நிதித் துறையில் பொருளாதார மந்த நிலையின் தாக்கம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
பாதுகாப்பு புகலிடம்
ஓராண்டை தாண்டியும் இதுவரையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான -பிரச்சனை, அமெரிக்கா சீனா இடையேயான பனிப்போர், மற்ற அரசியல் பதற்றங்கள், பணவீக்கம், நிதி நெருக்கடி என பல காரணிகளுக்கு மத்தியில், அது பாதுகாப்பு புகலிடதிற்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.


Click it and Unblock the Notifications