சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பெரும்பாலான முதலீட்டு திட்டங்களும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அதற்கு தங்கம் மட்டும் விதிவிலக்க என்ன?

 

ஏற்கனவே பேப்பர் தங்கம் என்ற, டிஜிட்டல் தங்களில் முதலீடுகள் அதிகரித்து தான் வருகின்றன.

டிஜிட்டல் தங்கம் என்பது புத்திசாலித்தனமான, வசதியான மற்றும் விலை மலிவான முதலீட்டு தேர்வாக இருக்கின்றன.

இருந்த இடத்தில் இருந்தே முதலீடு செய்யலாம்

இருந்த இடத்தில் இருந்தே முதலீடு செய்யலாம்

ஏனெனில் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே இதில் முதலீடு செய்து கொள்ளலாம். அதோடு இதன் விலைகள் சர்வதேச சந்தையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதால், விலையில் வெளிப்படைத் தன்மை உள்ளது. அதோடு இதனை பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள பல தளங்கள் உள்ளதால், தெளிவான முடிவினையும் எடுக்க முடியும்.

ஏராளமான கணிப்புகள்

ஏராளமான கணிப்புகள்

இப்படி ஏராளமான சலுகைகளுடன் உள்ளது தான் டிஜிட்டல் தங்கம். இப்படி ஒரு தங்கம் விலை இனி எப்படி இருக்கும் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர். வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்கபோகிறோம். இந்த கணிப்புகள் அனைத்தும் 10 கிராம் தங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கோல்டுமேன் சாச்சஸ் என்ன கூறுகிறது?
 

கோல்டுமேன் சாச்சஸ் என்ன கூறுகிறது?

கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் 61,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளது.

இதுவே காம்டிரெண்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஞானசேகர் தியாகராஜன் 10 கிராம் தங்கத்தின் விலையானது 60,000 - 62,000 ரூபாயினை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வாலின் கணிப்பு

மோதிலால் ஆஸ்வால் ஃபைனான்ஷியஸ் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் நரேன், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது 65,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளார்.

Gold price forecast ஏஜென்சி 2021ம் ஆண்டிக்குள் 66,600 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளது.

பேங்க் ஆப் அமெரிக்காவின் கணிப்பு

பேங்க் ஆப் அமெரிக்காவின் கணிப்பு

அடுத்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3000 டாலர்களை தொடலாம் என்று கணித்துள்ளது பேங்க் ஆப் அமெரிக்கா. இது இந்திய சந்தையில் இதன் மதிப்பு சுமார் 10 கிராமுக்கு 79,138 ரூபாயினை தொடலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது.

ABN Amro Bank அடுத்த ஆண்டுக்குள் அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொடலாம் என்று கணித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 52,755 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளது.

சிட்டி பேங்க் கணிப்பு

சிட்டி பேங்க் கணிப்பு

அடுத்த ஆண்டின் இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 58,847 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளது. (இது செப்டம்பர் 23 அன்று கணித்த விகிதமாகும்.)

இதுவே வாலட் முதலீட்டாளர் தங்கம் விலையானது 56,167 ரூபாயினை தொடலாம் என்று கடந்த அக்டோபர் 6 அன்று கணித்துள்ளது.

மோதிலால் ஆஸ்வாலின் லெவல்ஸ்

மோதிலால் ஆஸ்வாலின் லெவல்ஸ்

கடந்த செப்டம்பர் 17 அன்று மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் விபி அமித் சஜேஜா, 10 கிராம் தங்கத்தின் விலையானது அடுத்த மூன்று மாதத்தில் 56,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளார். இதே நவ்நீத் தமனி தங்கம் விலை குறைந்தால் 47,500 - 48,000 ரூபாய் வரையிலும், இதே ஏற்றம் கண்டால் 65,000 - 67,000 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஞ்சல் புரோக்கிங் என்ன சொல்கிறது?

ஏஞ்சல் புரோக்கிங் என்ன சொல்கிறது?

ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் கமாடிட்டி மற்றும் கரன்சி ஆய்வாளர் 3 மாதங்களில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 55,000 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளார். எனினும் மீடியம் டெர்மில் 51,050 ரூபாய் மற்றும் 51,300 ரூபாயினை தொடலாம் என்று கணித்துள்ளார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

வலுவான டாலர் என்பது பொதுவாக பலவீனமான தங்கம் என்பது பொருள். ஆக பொருளாதார யூகம் குறித்தான கணிப்புகள் வெளிவந்து கொண்டுள்ளது தங்கம் விலையில் எதிரொலிக்கிறது.

கொரோனா தடுப்பூசிய பற்றிய அறிவிப்புகள் வந்தால் தங்கம் விலை அழுத்தத்தினை எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த கொரோனா தடுப்பூசி குறித்தாக அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

அமெரிக்கா தேர்தல்

அமெரிக்கா தேர்தல்

அமெரிக்கா தேர்தல் நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் நிலையில், யார் ஜெயிப்பார்களோ என்ற நிச்சயமற்ற நிலை நீடித்து வருகின்றது. அதோடு வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்த கணிப்புகள் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றோடு வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரமும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கிகளின் வட்டி குறைப்பு

மத்திய வங்கிகளின் வட்டி குறைப்பு

ஒவ்வொரு நாட்டிலும் மத்திய வங்கிகள், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் விதமாக வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளனர். இதுவும் தங்கம் விலைக்கு சாதமாக அமைந்துள்ளன. இது எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனாவின் காரணமாக, நடப்பு ஆண்டில் தங்கம் உற்பத்தி வழக்கத்தினை விட வெகுவாக குறைதுள்ளதாக அறிக்கைகள் தரவுகள் கூறுகின்றன. ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதமாக அமையலாம்.

இனி என்ன செய்யலாம்?

இனி என்ன செய்யலாம்?

தங்கம் விலை கடந்த சில தினங்களாக சற்று ஏற்றத்தில் இருந்தாலும், செப்டம்பர் மாத உச்சத்தில் இருந்து காணும் போது நல்ல சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்ட நோக்கில் பார்க்கும் போது தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இது தங்கம் வாங்க சரியான நேரம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price predictions until the next year end

Gold price predictions until the next year end; here we were listed what are the positive and negative factors to watch.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X