புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வாலும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகளுக்காகச் சர்வதேச முதலிட்டாளர்கள் காத்திருக்கும் காரணத்தால் தங்கம் விலையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் தற்போது அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சில முக்கியமான முடிவுகளையும், அறிவிப்புகளையும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடும் எனக் கருதப்படுவதால் மந்தமான வர்த்தகச் சந்தை பதிவாகியுள்ளது.
சரி தங்கம் விலை இனி வரும் நாட்களில் உயருமா.. குறையுமா..? தங்கம் வாங்குவது குறித்துத் தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள் என்ன கூறுகிறார்கள்..?
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிந்த காரணத்தாலும், இன்று காலை ஆசிய சந்தையில் கலவையான வர்த்தகம் நிலவிய காரணத்தாலும் புதன்கிழமை காலையில் தடுமாற்றத்துடன் வர்த்தகத்தைத் துவங்கி சென்செக்ஸ் பெரிய சரிவில் முடிந்ததுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 271.07 புள்ளிகள் சரிவில் 52,501.98 புள்ளிகளை அடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்கள் சரிவு அடைந்தது.
தங்கம் விலையில் தடுமாற்றம்
இந்தப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கும், தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றத்திற்கும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்திற்கும் பெரும் தொடர்பு உள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு
கடந்த சில நாட்களாக அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் சரி, மும்பை பங்குச்சந்தையிலும் சரி முதலீட்டுகள் அதிகளவில் குவிந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதானி குழுமத்தின் பிரச்சனையால் அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது.
அமெரிக்கா டாலர் இந்திய ரூபாய்
இதனால் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத உயர்வை அடைந்துள்ள காரணத்தால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் விலை கணிசமாக இன்று உயர்ந்துள்ளது.
தங்க முதலீட்டு சந்தை
மேலும் இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிந்த நிலையில் கணிசமான முதலீடுகள் தங்க முதலீட்டு சந்தை பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலை கணிசமாக இந்தியச் சந்தையில் உயர்ந்துள்ளது.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை பல ஏற்ற இறக்கம் சந்தித்தாலும் தொடர்ந்து 1850 டாலர் அளவீட்டில் தான் உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1902 டாலரில் இருந்து தற்போது 1853 டாலர் வரையில் குறைந்துள்ளது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வெறும் 0.12 சதவீதம் அதிகரித்து 48,480 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்தக் கணிசமாக மாற்றம் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு தான் முக்கியக் காரணமாக உள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.51 சதவீதம் அதிகரித்து 71,613 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளிக்கு அதிக டிமாண்ட்
இந்திய சந்தையிலும் சரி வெளிநாட்டுச் சந்தையிலும் சரி வெள்ளிக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் 71000 ரூபாய் அளவீட்டில் இருந்து நீண்ட நாட்களாகக் குறையாமல் உள்ளது.
இதுதான் கணிப்பு
அமெரிக்காவின் பணவீக்க தரவுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், நாட்டின் வளர்ச்சிக்காக வட்டி விகிதத்தை அடுத்த சில காலாண்டுகளுக்கு உயர்த்த முடிவு ஏதுமில்லை என ஏற்கனவே பெடரல் ரிசர்வ் கூறியுள்ள நிலையில் பங்குச்சந்தைக்குச் சாதகமான நிலையில் தான் நாணய கொள்கை முடிவுகள் இருக்கும். இதனால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications