தங்கம் விலை தடாலடி உயர்வு.. என்ன காரணம்..? மீண்டும் ரூ.56,000-ஐ தொடுமா..?

இந்தியாவில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் மத்திய அரசின் BIS கட்டுப்பாடு மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மொத்த தங்க நகை வர்த்தகத்தையும் மற்றும் அளவிற்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகளை வாங்குவோரும், நகைக் கடை உரிமையாளர்களும் வியப்பில் உள்ளனர்.

தங்கம் விலை

தங்கம் விலை

இந்த வியப்பிற்கு முக்கியக் காரணம் தங்கம் விலை நேற்று மாலைக்குப் பின்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது இதனால் அடுத்த சில நாட்களுக்கு நகைக் கடைகள் காத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் 56,000 ரூபாய்

மீண்டும் 56,000 ரூபாய்

தற்போது சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் மூலம் தங்கம் விலை மீண்டும் தனது உச்ச அளவான 56,000 ரூபாய் அளவீட்டை அடையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி உயர்ந்தால் பங்குச்சந்தை மீதான முதலீடும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1,835 டாலரை தாண்டியது

1,835 டாலரை தாண்டியது

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,812.58 டாலர் முதல் 1,815.31 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால் மதிய வர்த்தகத்திற்கு மேல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1,835 டாலர் என்ற ஒரு மாத உயர்வைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள்

அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள்

தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள இந்தத் திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் தான். கடந்த வாரம் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அமெரிக்கச் சந்தை தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஆனால் தற்போது மொத்த வேலைவாய்ப்புத் தரவுகள்.

வெறும் 235,000 வேலைவாய்ப்புகள்

வெறும் 235,000 வேலைவாய்ப்புகள்

நேற்று வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் படி, ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7,20,000 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் வெறும் 235,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்கச் சந்தையைப் புரட்டிப்போட்டு உள்ளது.

கிரிட் லாக்..?

கிரிட் லாக்..?

ஒருபக்கம் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு, மறுபக்கம் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலை என அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை கிரிட் லாக் ஆகியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பெடர்ல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாதோர் மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டைப் பாதுகாக்கத் தங்கம்

முதலீட்டைப் பாதுகாக்கத் தங்கம்

இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைப் பாதுகாக்கப் பெருமளவிலான தொகையைத் தங்கத்தின் மீது திருப்பினர். இதன் எதிரொலியாகவே தங்கம் விலை நேற்று சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை தடாலடியாக 1,812.58 டாலரிலிருந்து 1,835 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இந்திய சந்தையிலும் விலை உயர்வு

இந்திய சந்தையிலும் விலை உயர்வு

சர்வதேச தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் மூலம் இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகத்தில் அதிகளவிலான உயர்வைப் பதிவு செய்துள்ளது.

MCX சந்தை தங்கம், வெள்ளி விலை

MCX சந்தை தங்கம், வெள்ளி விலை

10 கிராம் 24 கேரட் தங்கம் விலை நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1.06 சதவீதம் அதிகரித்து 47,487 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலை 2.95 சதவீதம் அதிகரித்து 65,154 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்பு பாதிப்புகளை உடனடியாகத் தீர்க்க முடியாது என்பதால் அடுத்த சில வாரங்களுக்குத் தங்கம் விலை தொடர்வ உயர்வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு

அமெரிக்க டாலர் மதிப்பு

இதேபோல் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே சரிந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74.60 ரூபாய் அளவில் இருந்த நிலையில், தற்போது 72.99 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதனால் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டும் உயர்வு கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும்.

மார்க் மொபியஸ் அறிவுரை

மார்க் மொபியஸ் அறிவுரை

சில நாட்களுக்கு முன்பு, நாணயங்களின் மதிப்பு தடுமாறும் நிலையில், 10 சதவீத முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்ப முதலீட்டாளர்களுக்கு மார்க் மொபியஸ் அறிவுரை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கச் சந்தையின் வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் ஏற்படும் முதலீட்டு மாற்றங்கள் மூலம் அமெரிக்க மட்டும் அல்லாமல் இந்திய சந்தை உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கும்.

பங்குச்சந்தை பாதிக்குமா..?

பங்குச்சந்தை பாதிக்குமா..?

இந்திய பங்குச்சந்தையும் இந்த வர்த்தக மாற்றத்தின் காரணமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதேபோல் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் சென்செக்ஸ் 10 சதவீதம் வரையில் கரெக்ஷன் அடையும் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இந்தப் பாதிப்பு காரணமாகவும் இந்தக் கரெக்ஷன் ஏற்படலாம், முதலீட்டாளர்கள் இனி வரும் காலகட்டத்தில் உஷாராக முதலீடு செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+