பொதுவாக தை மாதம் தொடங்கி விட்டாலே கல்யாண சீசன் தொடங்கி விடும். மக்களும் திருமணங்களுக்காக நகைகள் வாங்குவார்கள் என்பதால் இந்த காலத்தில் தங்கம் விற்பனை களை கட்டும். இந்த சூழ்நிலையில், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது தற்போது கல்யாணங்களை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஜூலையில் 1 கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,300ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.8,000ஆகவும் இருந்தது. ஆனால் அடுத்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.750 உயர்ந்தது.
கடந்த ஒரு வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.125 உயர்ந்தது. பிப்ரவரி 17ம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,920 என்ற அளவில் இருந்தது. கடந்த வாரம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,000ஐ தாண்டியது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு சவரன் தங்க ஆபரணத்தை வாங்க விரும்பினால் ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை செலவாகும். இதில், தயாரிப்பு கட்டணம், கழிவு மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவை அடங்கும்.

தற்போதைய திருமண சீசனில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது, திருமணத்தை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக அவர்கள் ஒரு தொகையை ஒதுக்கி வைத்திருப்பார்கள் ஆனால் விலை உயர்வால் தற்போது நகைக்காக கூடுதலாக செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு நடுத்தர வர்க்கத்தினர் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், நான் தச்சு வேலை செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ரூ.700 சம்பாதிக்கிறேன். என் மகளின் திருமணத்திற்கு 10 சவரன் நகை போடுவதாக நான் உறுதியளித்தேன். இப்பம் 10 சவரன் வாங்க ரூ.8 லட்சம் செலவாகும். நான் என் வாக்கை எப்படி காப்பாற்ற போகிறேன் என்று தெரியவில்லை. திருமணங்களை வைத்திருப்பவர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு சோதனையான நேரம் என்று தெரிவித்தார்.
திருச்சியை சேர்ந்த பிரபல நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், தங்கத்தின் கடுமையான விலை உயர்வு தங்க வர்த்தகத்திற்கு சாதகமாக இல்லை. கல்யாண சீசன் தொடங்கும் காலம் என்பதால் பொதுவாக தை மாதத்தில் தங்க வணிகம் சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போது வர்ததகம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஏழைகள், தினசரி கூலித் தொழிலாளர்கள் திருமணங்களுக்காக நகைகளை வாங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
Story Written: Subramanian
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?



Click it and Unblock the Notifications