கொரோனாவுக்கு மருந்து வந்தும் தங்கம் விலை உயர்வு.. என்ன காரணம்..?!

கொரோனாவால் உலக நாடுகள் முடக்கியிருக்கும் வேளையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாக்கத் தங்கம் மீது அதிகளவில் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது.

இந்நிலையில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றி அடைந்துள்ள நிலையில், பிரிட்டன் அரசு இந்தப் புதிய மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வெற்றி அடைந்து பிரிட்டன் அரசு அதைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது உயரத் துவங்கியுள்ளது.

தங்கம் விலையில் பெரும் மாற்றம்

தங்கம் விலையில் பெரும் மாற்றம்

நவம்பர் மாதம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா மருந்து அறிவிப்பு வெளியான போது இந்தியாவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 54,180 ரூபாயாக இருந்தது. தற்போது 51,120 ரூபாயாகச் சரிந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) வரையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது.

 

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

டிசம்பர் 3ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் 1,832.45 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட தங்கம் 1,825 டாலர் வரையில் சரிந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 1,844 வரையில் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தை விலை

எம்சிஎக்ஸ் சந்தை விலை

இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர் விலை 0.02 சதவீதம் வரையில் சரிந்து 49,292 ரூபாய் அளவில் உள்ளது. இதன் மூலம் அடுத்த 2 மாத காலத்தில் தங்கம் விலையில் பெரிய அளவிலான சரிவை எதிர்நோக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது.

முதலீடு

முதலீடு

இதன் மூலம் தங்கத்தை முதலீடாகச் செய்ய விரும்புவோர், இன்னும் சில வாரங்கள் காத்திருந்து முதலீடு செய்வது சிறந்தது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசி பெறும் நிலையில் வர்த்தகச் சந்தையில் நிலை முற்றிலும் மாறலாம்.

இப்படி மாறும் பட்சத்தில் தங்கம் விலையில் பெரிய அளவிலான சரிவு ஏற்படும்.

 

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தை விலை

இன்றைய ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 22 ரூபாய் அதிகரித்து 5,007 ரூபாயில் இருந்து 5,029 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இதேபோல் 8 கிராம் தங்கம் 40,232 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 50,290 ரூபாய்க்கும், 100 கிராம் தங்கம் 5,02,900 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 4,590 ரூபாயில் இருந்து 4,610 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இதேபோல் 8 கிராம் தங்கம் 36,880 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 46,100 ரூபாய்க்கும், 100 கிராம் தங்கம் 4,61,000 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

தங்கம் விலை 15% சரிவு

தங்கம் விலை 15% சரிவு

ஆகஸ்ட் மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை 57,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 48000 ரூபாய் அளவில் சரிந்து சுமார் 15 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. கொரோனாவுக்கான மருந்து உலகம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அடுத்த சில மாதத்தில் பெரிய அளவிலான சரிவை எதிர்பார்க்க முடியும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+