இந்தியாவில் தங்கம் விலையில் கடந்த 5 நாட்களில் 4 நாட்கள் குறைந்து வருவதால் தங்க முதலீட்டாளர்கள் கவலை அடைந்தாலும், தங்கத்தைச் சேமிப்பிற்காக வாங்குவோருக்கும் நல்ல காலமாக விளங்கியுள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் பெரிய அளவில் தங்கம் மீது குவியும் எனக் கணிக்கப்பட்டு வரும் வேளையில், பணவீக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாகக் குறையும் என்றும் இதனால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
MCX சந்தையில் தங்கம் விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று MCX சந்தையில் தங்கம் விலை காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருக்கும் காரணத்தால் புல்லியன் முதலீட்டாளர்கள் சோகத்தில் உள்ளார். சர்வதேசச் சந்தையைப் பார்க்கும் போது அடித்த சில வாரங்களுக்குத் தங்கம் சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் இருக்காது எனத் தெரிகிறது.
பங்குச்சந்தை ஆதிக்கம்
இதன் மூலம் இந்தியாவிலும் தங்கம் விலையில் தொடர்ந்து மந்தமாகவே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வேளையிலும் பங்குச்சந்தை வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் பெருமளவிலான முதலீடுகள் தொடர்ந்து பங்குச்சந்தையில் தான் குவிந்து வருகிறது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்றைய எம்சிஎக்ஸ் வர்த்தகச் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.25 சதவீதம் சரிந்து 48,425.00 புள்ளிகளை அடைந்துள்ளது. நேற்றை வர்த்தகத்தில் 48,500 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கும் அதிகமாகத் தங்கம் விலை சரிந்துள்ளது.
வெள்ளி விலையும் சரிவு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரம் முழுக்க வெள்ளி விலையும் குறைந்துள்ளது. தற்போது பல உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிப்பதில் வெள்ளி பயன்படுத்தும் காரணத்தால் வெள்ளிக்கு டிமாண்ட் சற்று அதிகமாகவே இருந்தது.
வெள்ளி விலை
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி விலை 0.67 சதவீதம் வரையில் சரிந்து 71,822.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியைப் போலவே காப்பர் உலோகத்தின் விலையும் 0.78 சதவீதம் சரிந்து 746.25 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை
மேலும் சர்வதேசச் சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தொடர்ந்து 1,875 டாலர் முதல் 1,879 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,36,824.94 ரூபாய்க்குக் குறைந்து தற்போது வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

கச்சா எண்ணெய் சரிவு: இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு! டிரம்ப், ஈரான் மோதல் என்ன ஆனது?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications