கொரோனா ரணகளத்திலும் தொடர்ந்து நல்ல லாபம் கொடுத்துக் கொண்டு இருக்கும் ஒரே முக்கிய முதலீடு தங்கம் எனலாம். அதே சர்வதேச சந்தையாக இருந்தாலும் சரி, இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் சரி, தங்கம் தான் டாப்.
இன்னும் சொல்லப்போனால் தங்கம் விலையானது வரும் காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் அவ்வப்போது தங்கம் விலை சரிந்து வந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு தான் வருகிறது. சரி இன்று தங்கம் விலை எப்படி இருக்கிறது வாருங்கள் பார்க்கலாம்.
என்ன காரணம்?
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றும் கூட, காலை நேர வர்த்தகத்தில் விலை அதிகரித்தாலும், தற்போது சர்வதேச சந்தையில் விலை சற்று குறைந்துள்ளது. சரி இதற்கு என்ன காரணம், தங்கம் விலை இன்று காலையில் உச்சத்தின் அருகில் சென்று, சற்று குறைந்துள்ளது.
அமெரிக்கா- சீனா பதற்றம்
அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றத்தினால், தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா சீனாவுடனான முழு உறவையும் முறித்துக் கொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார். மேலும் ஜி ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.
சர்வதேச சந்தையில் விலை
இதனையடுத்து இன்று காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலையானது, இன்று காலையில் 1748.85 டாலர் வரை அதிகரித்தது. எனினும் மாலை நேர வர்த்தகத்தில் (5.30 மணியளவில்) அவுன்ஸூக்கு 1.45 டாலர் குறைந்து 1,739.45 டாலர்களாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலையானது 321 ரூபாய் அதிகரித்து, தற்போது 46,975 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது தொடர்ந்து இந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் உச்ச விலையையும் தாண்டி (46990 ரூபாய்) இன்று சுமார் 47,030 ரூபாயாக வர்த்தகமாகியது.
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று மட்டும் 3.46 சதவீதம் ஏற்றம் கண்டு 16.725 டாலர்களாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகிறது எனலாம். இன்று மட்டும் 1551 ரூபாய் அதிகரித்து, 45,686 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இது இன்று மட்டும் 3.54% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஆபரண விலை
ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் இன்று சென்னையில் கிராமுக்கு 12 ருபாய் அதிகரித்து 4,484 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 35,872 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,787 ரூபாயாகவிம் இதே 8 கிராம் தூய தங்கத்தின் விலையானது 38,296 ரூபாயவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆபரண வெள்ளி
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலை கிராமுக்கு 45.25 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 45,250 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் வெள்ளியின் விலையானது, இன்றும் ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications