யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை! வருங்காலத்தில் எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 54,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு 43,232 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அதே சிங்காரச் சென்னையில், 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைக்கு 49,540 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். பவுனுக்கு 39,632 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

இதுவரை விலை இறக்கம் கண்டு வந்த தங்கம், கடந்த சில நாட்களாக, யூடேர்ன் எடுத்து, விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. ஆபரணத் தங்கம் தொடங்கி, சர்வதேச தங்கம் வரை, எவ்வளவு விலை ஏற்றம் கண்டு இருக்கிறது? ஏன் விலை ஏற்றம் காண்கிறது போன்றவைகளைப் பார்ப்போம்.

சென்னையில் தங்கம் விலை - 24 கேரட் ஆபரணத் தங்கம்
 

சென்னையில் தங்கம் விலை - 24 கேரட் ஆபரணத் தங்கம்

கடந்த 29 ஆகஸ்ட் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,580 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். கடந்த மாதத்தில், இது தான் தங்கம் கண்டு மிகக் குறைந்த விலை. ஆனால் நேற்று இதே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 54,040 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள் ஆக 460 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்னையில் தங்கம் விலை - 22 கேரட் தங்கம்

சென்னையில் தங்கம் விலை - 22 கேரட் தங்கம்

கடந்த 29 ஆகஸ்ட் 2020 அன்று 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,120 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். ஆகஸ்ட் மாதத்திலேயே, 22 கேரட் தங்கம் கண்டு மிகக் குறைந்த விலை. ஆனால் நேற்று இதே 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 49,540 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள் ஆக 420 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம் ஃப்யூச்சர் விலை

மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம் ஃப்யூச்சர் விலை

அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 27 ஆகஸ்ட் 2020 அன்று, குறைந்தபட்சமாக, 50,533 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று (01 செப்டம்பர் 2020) 52,080 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 1,547 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.

கமாடிட்டி சந்தையின் வெள்ளி ஃப்யூச்சர் விலை
 

கமாடிட்டி சந்தையின் வெள்ளி ஃப்யூச்சர் விலை

செப்டம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் கடந்த 26 ஆகஸ்ட் 2020 அன்று, குறைந்தபட்சமாக, 63,153 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால் இன்று, 68,693 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 5,540 ரூபாய் வெள்ளி ஃப்யூச்சர்ஸின் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை - ஒரு அவுன்ஸ் கணக்கு

இண்டர்நேஷனல் தங்கம் விலை - ஒரு அவுன்ஸ் கணக்கு

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 27 ஆகஸ்ட் 2020 அன்று 1,929 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று சுமாராக 1,989 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த ஒரு சில நாட்களில் 60 டாலர் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம்.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

பொதுவாக, சர்வதேச தங்கம் விலை ஏற்றம் கண்டால், அதனைத் தொடர்ந்து எம் சி எக்ஸ் தங்கம் & ஆபரணத் தங்கம் வரை எல்லாமே விலை ஏற்றம் காண நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த சர்வதேச தங்கம் விலை, தற்போது ஏற்றம் காண என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.

அமெர்க்க ஃபெடரல் ரிசர்வ்

அமெர்க்க ஃபெடரல் ரிசர்வ்

அடுத்த சில காலங்களுக்கு, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதங்களை குறைவாகவே வைத்துக் கொள்ளும் எனச் சொல்லி இருக்கிறது. அதே நேரத்தில் சீனாவின் தொழிற்சாலை செயல்பாடுகள், ஆகஸ்ட் மாதத்தில் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. எனவே தங்கம் மெல்ல விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

0.28 % இறக்கத்தில் டாலர் இண்டெக்ஸ்

0.28 % இறக்கத்தில் டாலர் இண்டெக்ஸ்

பொதுவாக அமெரிக்க டாலருக்கு நிகரான, மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு அதிகரித்தால், டாலர் பலவீனமடையும். இதனால் மற்ற நாட்டு கரன்சி வைத்திருப்பவர்கள், குறைந்த விலை கொடுத்து டாலரில் தங்கத்தை வாங்க முடியும். இன்று காலையில் இருந்து டாலர் இண்டெக்ஸ் 0.28 % இறக்கம் கண்டு 91.88 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகி வருகிறது. கடந்த 24 ஆகஸ்ட் 2020 அன்று 93.29 புள்ளிகளாக டாலர் இண்டெக்ஸ் இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வதேச & உலக பிரச்சனைகள்

சர்வதேச & உலக பிரச்சனைகள்

அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகள் இன்னும் சுமூகமாக தீர்க்கப்படவில்லை. அதே போல கொரோனா வைரஸ், உலகம் முழுக்க, சுமாராக 2.5 கோடி பேருக்கு மேல் பரவி இருக்கிறது. மீண்டும் இந்தியா உடன் சீனா எல்லைப் பகுதிகளில் பிரச்சனைகளைக் கிளப்பி இருக்கிறது. இன்னும் எல்லா நாட்டு பொருளாதாரங்களும் பழைய படி, முழு வேகத்தில் செயல்படத் தொடங்கவில்லை. இப்படி சர்வதேச பிரச்சனைகளும், கொரோனாவும் ஒரு முடிவுக்கு வராத வரையில், வருங்காலத்திலும், தங்கம் விலை அதிகரிக்க, நிறைய வாய்ப்பு இருப்பதாக அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price started to go up in the last few days

Chennai physical gold price, International gold price and MCX gold price has started to go up in the last few days.
Story first published: Tuesday, September 1, 2020, 13:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?