தங்க முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே தடுமாற்றத்திலேயே உள்ளது. அதிகளவு ஏற்றம் காண முடியாமலும், சரிவினையும் காண முடியாமலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

 

நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், அமெரிக்கா சந்தைகளும் தங்கத்திற்கு சாதகமாக இருந்தும் தங்கம் விலையானது குறிப்பிட்ட ரேஞ்ச்குள்ளேயே காணப்படுகிறது.

சரி இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்? வாங்கலாமா? விற்கலாமா? வாருங்கள் பார்க்கலாமம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

கடந்த வாரத்தில் https://tamil.goodreturns.in/news/gold-prices-next-week-will-offer-a-great-opportunity-to-buy-020731.html என்ற கட்டுரையில், தங்கம் மீண்டும் சரிவினை எட்டும். அது செப்டம்பர் பிற்பகுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்தில் இருக்க வேண்டும். எனினும் அது விரைவில் பச்சை மண்டலாமாக மாறும் என்று நிபுணர்கள் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. அதாவது இந்த சுழற்சி முறையில் தங்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் என்று கூறுகின்றனர்.

தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணிகள்

தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணிகள்

அதோடு தங்கத்திற்கான முக்கிய ரெஸ்டன்ஸ் லெவல் 1900 டாலர்களாகும். இதனை உடைத்து செல்லும் போது சற்று வலுவாக ஏற்றம் காண வாய்ப்புகள் உண்டு. அதோடு தங்கம் விலையானது குறைந்தாலும், அது பையிங் டிரெண்ட் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. நிச்சயம் அது ஏற்றம் காணும். ஏனெனில் எந்த காரணிகளும் மாறவில்லை. அப்படியே தான் உள்ளது. தங்கத்தினை விலையில் எதிரொலிக்கும் முக்கிய காரணிகள் அனைத்துமே தங்கத்திற்கு எதிராகத் தான் உள்ளன என்று நிபுணர்கள் கூறியதும் கவனிக்கதக்க விஷயம்.

விலையை தீர்மானிக்கும் காரணிகளில் மாற்றம் இல்லை
 

விலையை தீர்மானிக்கும் காரணிகளில் மாற்றம் இல்லை

உண்மையில் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் எந்த காரணிகளிலும் பெரிய மாற்றம் இல்லை. பொதுவாக தங்கம் பொருளாதாரத்திற்கு எதிராக ஒரு ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுவதால், அதன் முதலீட்டு தேவைகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஊக்கத் தொகை விரைவில் கிடைக்குமா?

ஊக்கத் தொகை விரைவில் கிடைக்குமா?

அதெல்லாம் சரி, அப்படி எல்லாம் பார்த்தால் தங்கம் விலை மீண்டும் சரசர வென ஏற்றம் காணத் தானே வேண்டும் ஏன் குறைகிறது என்று கேட்கிறீர்களா? அமெரிக்காவின் பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட ஊக்கத்தொகை விரைவில் வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்

நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்

ஏனெனில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில், யார் ஜெயிப்பார்கள் என்ற நிச்சயமற்ற சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்களின் பக்கம் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளும் வாக்குறுதி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா அரசின் 1.8 டிரில்லியன் டாலர் ஊக்கத் தொகையை தாண்டியும் தான் செல்ல தயராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் அதனை நிராகரித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக்கு தடை

பொருளாதார வளர்ச்சிக்கு தடை

ஆக இது அமெரிக்கா தேர்தலுக்கு முன்பு இந்த ஊக்கத்தொகை செயல்பாட்டுக்கு வருவதை தாமதமாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார ஊக்குவிப்புக்கு தடையாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதாரவாகவே அமையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

இதற்கிடையில் பரவி வரும் கொரோனா, கொரோனா தடுப்பூசி பற்றிய நிச்சயமற்ற சூழல், அமெரிக்கா - சீன பதற்றம், பொருளாதார வீழ்ச்சி, வட்டி விகிதம், முதலீட்டு தேவை, பிசிகல் தங்கத்தின் தேவை, தங்கம் உற்பத்தி என அனைத்தும், தங்கத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

கடந்த இரண்டு தினங்களாகவே காலை நேரத்தில் சற்று சரிவினைக் கண்டு, பின்பு ஏற்றத்தினை கண்டு வரும் சர்வதேச தங்கம் விலையானது, இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு தங்கம் விலையானது சற்று குறைந்து, 1908.50 டாலர்களாக காணப்படுகிறது. தங்கத்தின் நேற்றைய முடிவு விலையானது 1910.35 டாலர்களாக இருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் அதே 1910.35 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலையானது 1913.30 டாலர்களை உடைத்துக் கொண்டு, இன்று இதுவரை 1915.15 டாலர்கள் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று ஏற்றத்தில் காணப்படும் சர்வதேச வெள்ளி விலை

சற்று ஏற்றத்தில் காணப்படும் சர்வதேச வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது 0.46% ஏற்றம் கண்டு, 24.330 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் நேற்றைய முடிவு விலையானது 24.224 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் கேப் அப்பில் தொடங்கி 24.378 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது அதிகரித்து வரும் வெள்ளிக்கான தேவையையே சுட்டிக் காட்டுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 72 ரூபாய் குறைந்து, 50,640 ரூபாயாக காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருவது நினைவுகூறத்தக்கது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 35 ரூபாய் குறைந்து, 61,500 ரூபாயாக காணப்படுகிறது. தொழிற்சாலைகளில் வெள்ளியின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வெள்ளியின் விலையும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று இன்னும் விலையில் மாற்றம் காணவில்லை. இதே நேற்று சவரனுக்கு வெறும் 8 ரூபாய் மட்டுமே குறைந்து 38,680 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது கிராமுக்கு 4,835 ரூபாயாகவும் இருந்தது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும், இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. இதே நேற்று சவரனுக்கு 32 ரூபாய் மட்டுமே குறைந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,275 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் பெரியளவில் இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. நேற்று கிராமுக்கு 61 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் தேவையானது வரவிருக்கும், பண்டிகை காலங்களில் அதிகரிக்கலாம் என்றும், அதோடு தொழில்சாலை தேவை மற்றும் முதலீட்டு தேவை என அனைத்தும் சேர்ந்து நீண்ட கால நோக்கில் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்டகால நோக்கில் எனும் போது தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும். எனினும் குறைந்த விலையிலான இந்த நிலையில், தங்கத்தினை வாங்கவே முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் முக்கிய காரணிகள் அனைத்தும் தங்கம் விலை ஏற்றம் காணவே சாதகமாக அமைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price starts to fall in morning session

Gold and silver prices are fall in morning session
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X