வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து வருகிறது.

உண்மையில் தங்கம் வாங்குவோருக்கு இது நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் குறைந்த விலையில் தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பாக அமையுமே.

தொடர்ந்து ஆறாவது நாளாக சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள்? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

தங்கம் Vs டாலர்

தங்கம் Vs டாலர்

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு சற்று வலுவிழந்து காணப்படும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. இது தங்கத்திற்கு ஆதரவாகவும் உள்ளது. எனினும் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள், தங்கம் விலையினை அதிகளவில் சரிவதை தடுக்கும் விதமாக உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள்

அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாகவே அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குழப்பத்தில் முதலீட்டாளர்கள்

குழப்பத்தில் முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள் மத்தியில் மிக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஊக்கத் தொகை குறித்தான சரியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு, மிகப்பெரிய பொருளாதாரம் தேவைப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அது எவ்வளவு வரும்? அது பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பயன்படுமா? என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது.

Comex தங்கம் நிலவரம்

Comex தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் பலமான வீழ்ச்சி கண்டு வந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது, தற்போது அவுன்ஸூக்கு 0.50 டாலர்கள் குறைந்து, 1871.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை உடைக்காமலேயே கடந்த மூன்று வர்த்தக தினங்களாக சற்று அதற்கு மேலேயே வர்த்தகமாகி வருகின்றது.

Comex வெள்ளி நிலவரம்

Comex வெள்ளி நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் நன்கு வீழ்ச்சி கண்ட நிலையில், இன்றும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 016% குறைந்து, 24.323 டாலர்களாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 24.260 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 24.245 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 108 ரூபாய் அதிகரித்து, 50,320 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக, கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கிலோவுக்கு, இன்று கிலோவுக்கு 42 ரூபாய் அதிகரித்து, 62,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறி வரும் நிலையில், இன்று வாங்கி வைக்கலாம். ஆனால் மீடியம் டெர்மில் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+