இந்தியாவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வருகிறது. க்டந்த வாரம் இறங்குமுகமாக இருந்த தங்கம் இந்த வாரம் திடீரென ஏறுமுகமாக மாறிவிட்டது. கடந்த 5 நாட்களிலேயே ஆபரணதங்கம் விலை சவரனுக்கு 5000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் தங்கம் விலை உயர்ந்தாலும் நகை விற்பனையில் பாதிப்பு இருக்காது என்கின்றனர் நகை கடை உரிமையாளர்கள்.
தங்கம் விலை கடந்த சில நாட்களில் திடீரென உயர்ந்திருந்தாலும், அட்வான்ஸ் புக்கிங் மிக வலுவாக உள்ளதால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையில் தங்க விற்பனை 10% முதல் 12% வரை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை 4.56% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிரிசில் நிறுவனத்தின் கணிப்புப்படி, விலை உயர்வின் காரணமாக ஒட்டுமொத்த நகை விற்பனையின் அளவு 4% முதல் 6% வரை குறைய வாய்ப்புள்ளது;ஆனாலும் விலை உயர்ந்திருப்பதால் வருவாய் வளர்ச்சி 20% முதல் 21% வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் , இந்த ஆண்டு தீபாவளிக்கான தங்கம் விற்பனை 12% வரை வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது இதற்கு இவர்களால் கணிக்கப்பட்ட 7% முதல் 10% வளர்ச்சியை விட இது அதிகமாகும்.
தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக்கூடும் என்றும், இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்து உலகப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் குறையலாம் என்றும் சுரேந்திர மேத்தா கூறியுள்ளார்.
அகில இந்திய நகை மற்றும் ந்கை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேசிய பொது செயலாளர் நித்தின் கேடியா கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விற்பனை 10% வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம் என்றார். பண்டிகைக்கு முந்தைய நாட்களிலேயே வாடிக்கையாளர்களிடம் தங்கம் வாங்கும் ஆர்வம் பலமாக இருப்பதை பார்க்க முடிகிறது என கூறுகிறார்.
இந்த ஆண்டு பெருநகரங்களைத் தாண்டி சிறிய நகரங்களில் இருந்து தங்கத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நகை விற்பனை கடந்த ஆண்டை விட 2.5 மடங்கு வரை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இருந்தே தங்க நகை கடைகளுக்கு மக்களீன் வருகை அதிகரித்துவிட்டதால் இந்த விலை ஏற்றம் பெரிய அளவில் விற்பனையை பாதிக்காது என்றே நகை வியாபாரிகள் கூறுகின்றனர். தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து சரிந்து மீண்டு வருகிறது என்பதால் மீண்டும் வரலாற்று உச்சத்தை தொடுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

