கிடு கிடுவென உயரும் தங்கம் விலை! செம சரிவில் அமெரிக்க டாலர்! அடுத்து என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வாழும் பெரிய பணக்காரர்கள் தொடங்கி, அன்றாடம் கூலி வேலை பார்க்கும் எளிய மனிதர்கள் வரை, பெரும்பாலும் எல்லோருமே தங்கம் வைத்திருக்கிறார்கள்.

ஏழை எளிய மக்கள் ஆபரணத் தங்கத்தை வாங்குகிறார்கள் என்றால், பணக்காரர்கள் பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.

ஆக எல்லோருமே தங்கத்தில் ஆர்வமுடன் தான் இருக்கிறார்கள். அப்பேற்பட்ட தங்கம் விலை, கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டு இருந்தது. தற்போது கிடு கிடுவென ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.

இதை எல்லாம் பார்க்கலாம்

இதை எல்லாம் பார்க்கலாம்

சென்னை ஆபரணத் தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் தங்கம் விலை என்ன? சர்வதேச தங்கம் விலை நிலவரம் என்ன? தங்கம் விலையில் ஏன் இந்த திடீர் ஏற்றம்? அமெரிக்க டாலருக்கு என்ன ஆச்சு? அடுத்து தங்கம் விலை என்ன ஆகும்? என பல கேள்விகளுக்கும் விரிவாக விடை காண்போம்.

இன்றைய தங்கம் விலை என்ன (24 & 22 கேரட்)

இன்றைய தங்கம் விலை என்ன (24 & 22 கேரட்)

பாரிஸ் கார்னர், செளகார்பேட்டை போன்ற ஏரியாக்களை கொண்ட சென்னையில், இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,240 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,810 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

₹1,370 ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம்

₹1,370 ஏற்றம் கண்ட ஆபரணத் தங்கம்

24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை, கடந்த 24 செப் 2020 அன்று 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதை இன்றைய விலையான 53,240 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 1,370 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.

MCX Gold Price - 04 டிசம்பர் காண்டிராக்ட்

MCX Gold Price - 04 டிசம்பர் காண்டிராக்ட்

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை நேற்று 642 ரூபாய் (1.28 %) விலை அதிகரித்து 50,817 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

₹1,565 விலை ஏறிய எம்சிஎக்ஸ் தங்கம்

₹1,565 விலை ஏறிய எம்சிஎக்ஸ் தங்கம்

டிசம்பர் மாதத்துக்கான தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 28 செப் 2020 அன்று 49,252 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று 50,817 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக இந்த சில நாட்களில் எம் சி எக்ஸ் தங்கம் விலை 1,565 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.

XAU USD CUR - ஒரு அவுன்ஸ் தங்கம் விலை

XAU USD CUR - ஒரு அவுன்ஸ் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 36 டாலர் (1.93 %) விலை அதிகரித்து 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த 05 அக்டோபர் 2020 அன்று 1,913 டாலரைத் தொட்டு வர்த்தகமானதைக் கடந்து இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

$69 எகிறிய சர்வதேச தங்கம்

$69 எகிறிய சர்வதேச தங்கம்

கடந்த 25 செப் 2020 அன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,861 டாலருக்கு வர்த்தகமானது. நேற்று 1,930 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய விலை உடன் 1,861 டாலரை ஒப்பிட்டல் 69 டாலர் அதிகரித்து இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

பயங்கர சரிவில் டாலர் கரன்சி

பயங்கர சரிவில் டாலர் கரன்சி

DXY:CUR இண்டெக்ஸ் தான், அமெரிக்க டாலர், உலகின் ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக எவ்வளவு வலுவாக இருக்கிறது எனக் காட்டும். கடந்த 25 செப் 2020 அன்று 94.64 புள்ளிகளில் இருந்தது டாலர் இண்டெக்ஸ். அதாவது அமெரிக்க டாலர் வலுவடைந்து இருந்தது.

தட தட சரிவில் டாலர்

தட தட சரிவில் டாலர்

ஆனால் கடந்த 25 செப் 2020-க்குப் பிறகு, இது நாள் வரை, பெரிய ஏற்றம் காணவில்லை. 25.9.2020 அன்று 94.64 புள்ளிகளைத் தொட்ட டாலர் இண்டெக்ஸ், நேற்று 93.05 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. டாலர் இண்டெக்ஸ் சரிகிறது என்றால், டாலர் பலவீனமடைகிறது என்று பொருள். எனவே தன்னிச்சையாக தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

மற்ற காரணிகள்

மற்ற காரணிகள்

அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. குடியரசுக் கட்சி தொடங்கி, ஜனநாயகக் கட்சி வரை எல்லோருமே ஸ்டிமுலஸ் பேக்கேஜை கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறார்கள். பூகோள அரசிய பிரச்சனைகள், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை போன்றவைகள் எல்லாமே தங்கத்தின் விலை அதிகரிக்க உதவும் காரணிகளாக இருக்கின்றன.

தங்கம் விலையில் அடுத்து என்ன?

தங்கம் விலையில் அடுத்து என்ன?

எல்லோரும் எதிர்பார்த்த விதத்தில் சர்வதேச தங்கம் விலை 1,920 டாலரைக் கடந்து இருக்கிறது. இனி அடுத்தடுத்த நாட்களில், சர்வதேச தங்கம் விலை, இந்த 1,920 டாலரை தக்க வைத்துக் கொண்டால், தானாகவே தங்கம் விலை முன்னேறும் என எதிர்பார்க்கலாம். எனவே அனலிஸ்ட்கள் சொல்வது போல, தங்கம் விலை இறக்கம் காணும் போது எல்லாம் வாங்குங்கள். நீண்ட காலத்தில் நல்ல விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price surging like a raging bull USD value is falling against 6 currencies

The Gold price has been surging like a raging bull. At the same time the American dollar currency value is falling against the major six currencies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X