தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு.. நடுத்தர மக்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த அமர்விலும் காலை அமர்வில் தடுமாற்றத்தில் காணப்பட்ட தங்கம் விலை,மாலை அமர்வில் மீண்டும் உச்சம் எட்டியது. இதற்கிடையில் வார இறுதி வர்த்தக நாளான இன்றும் சற்றே ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இது தொடர்ந்து அமெரிக்கா டாலரின் மதிப்பானது சரிவில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், அது மெதுவான வேகத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதற்கிடையில் இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. நகை பிரியர்கள் மிக கவலை..! தங்கம் விலை மீண்டும் ஏற்றம்.. நகை பிரியர்கள் மிக கவலை..!

ரேஞ்ச் பவுண்டில் விலை

ரேஞ்ச் பவுண்டில் விலை

டெக்னிக்கலாக தங்கம் விலையானது மீண்டும் ஒரு ரேஞ்ச் பவுண்டில் காணப்படுகின்றது. தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 56,200 ரூபாயாகும். இதே முக்கிய சப்போர்ட் விலையானது 55,400 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 69,800 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 67,500 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

தங்கம் விலை எப்படியிருக்கும்?

தங்கம் விலை எப்படியிருக்கும்?

அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான அறிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.5% ஆக உயர்ந்துள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்தாலும், வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கும் வட்டி விகிதத்தினை பொறுத்து, தங்கம் விலை நீண்டகால நோக்கில் இருக்கலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

இதே இன்று தங்கம் விலையானது 1882 - 1868 டாலர் என்ற சப்போர்ட் லெவலையும், இதே 1908 - 1915 டாலர் என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலையும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 23.52 - 23.35 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ட் லெவலாக 24.15 - 23.95 டாலராகவும் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 10 கிராமுக்கு, 55,54 - 55,380 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 68,5 - 67,520 ரூபாயாகவும், இதே 69,320 - 69,680 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1898.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போல அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23,817 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 59 ரூபாய் அதிகரித்து, 55,934 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 223 ரூபாய் குறைந்து, 68,420 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 5250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 5725 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 130 ரூபாய் அதிகரித்து, 57,250 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 74 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price to remain range bound, may find support at Rs.55,400

gold jewellery prices in Rs.42,000 per 8 gram, silver price remain today unchanged
Story first published: Friday, January 13, 2023, 13:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X