தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்கள் சொல்லும் முக்கிய காரணங்களை பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையில் அத்தியாவசிய தேவைக்கே கஷ்டப்படும் நிலையில் தங்கத்தின் தேவையானது குறைந்து வருகின்றது.

 

இதன் தாக்கம் இந்தியாவில் எப்படியுள்ளது? சர்வதேச நிலவரம் என்ன? இனி எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்து வந்தாலும், அது இந்திய சந்தையில் அவ்வளவாக எதிரொலிக்கவில்லை. மாறாக இந்திய சந்தையில் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. என்ன காரணம்? இது இன்னும் தொடர்ச்சியாக ஏற்றம் காணும் என்பதற்கான அறிகுறியா? இனி விலை எப்படி இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம்

தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11.10 டாலர்கள் குறைந்து, 1780.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் இது நல்ல வாய்ப்பே.

தற்போது சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தற்போது சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில், தங்கத்தினை விட பலமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.29% குறைந்து, 26.613 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தடுமாறும் இந்திய தங்கம் விலை
 

தடுமாறும் இந்திய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள போதிலும், இந்திய கமாடிட்டி சந்தையில் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 74 ரூபாய் அதிகரித்து, 46,945 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைவது போல் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தடுமாறும் இந்திய வெள்ளி விலை

தடுமாறும் இந்திய வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்பொது கிலோவுக்கு 201 ரூபாய் அதிகரித்து, 69,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

ஏன் தங்கத்தினை வாங்கலாம்?

ஏன் தங்கத்தினை வாங்கலாம்?

பொதுவாக தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக காணப்படும். ஆனால் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே, சர்வதேச சந்தையில் சரிவிலும், இந்திய சந்தையில் ஏற்றத்திலும் காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் முதல் முறையாக டிஸ்கவுண்டில் விற்பனை செய்யப்படுகிறது. அவுன்ஸூக்கு 2 டாலர் டிஸ்கவுண்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக இது வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கம்

பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கம்

பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், மக்கள் தற்போது பிற முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதோடு பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் நிலையில், தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவின் காரணமாக மற்ற ரிஸ்கியான முதலீடுகளை விட, வட்டியே இல்லாவிட்டாலும், பாதுகாப்பு புகலிடமான தங்கமே சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

தற்போது நாட்டில் கொரோனா விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அது பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தினசரி சராசரியாக 3 லட்சத்தினை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு, மே மாத மத்தியில் இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இதனால் பொருளாதார வளர்ச்சியில் இது தடையினை ஏற்படுத்தலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றது.

மத்திய வங்கிகளின் வட்டிவ் விகிதம்

மத்திய வங்கிகளின் வட்டிவ் விகிதம்

அமெரிக்கா உள்ளிட்ட மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை மிகக் குறைவாக வைத்துள்ளன. இது சந்தையில் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஏனெனில் ஒரு புறம் பணவீக்கம் பற்றிய அச்சம், வட்டி குறைவால் முதலீடுகள் சரிவு என பல காரணிகள் தங்கத்துக்கு ஆதரவாக இருக்கலாம்.

கிரிப்டோகரன்சி முதலீடுகள்

கிரிப்டோகரன்சி முதலீடுகள்

தங்கத்திற்கு இணையாக தற்போது பார்க்கப்படும் முதலீடுகளில், கிரிப்டோகரன்சிகளும் உண்டு. இன்றைய நாளில் இதற்கு உலகம் முழுக்க ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் இதில் ஏற்ற இறக்கம் அதிகம் என்பதால் பெரும் முதலீட்டாளர்கள் அதிகமாக இதனை விரும்புகின்றனர். எனினும் இதற்கு எதிராக பாதுகாப்பு புகலிடமாக தங்கம் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

தங்கம் ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாகவே இன்றளவிலும் பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. இது ஒரே மாதிரியாக இல்லை. ஆக டாலரின் மதிப்பு சரியும் போது, தங்கம் பிடித்தமான முதலீடாக மாறலாம். அதோடு அமெரிக்க மத்திய வங்கியானது மீண்டும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஊக்குவிப்பு தொகை பற்றிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இது அறிவிக்கப்பட்டால், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையும்.

தங்கத்தின் அவுட்லுக்

தங்கத்தின் அவுட்லுக்

தங்கம் விலையானது எவ்வளவு குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கலாம். ஏனெனில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது நிச்சயம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். தங்கம் விலையானது 1750 டாலர்களை சப்போர்ட்டாக கொண்டுள்ளது. இது அடுத்து 1820 டாலர்களை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் இந்திய சந்தையில் 47,800 ரூபாய் என்ற லெவலையும், மீடியம் டெர்மில் 50,000 ரூபாயினையும் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் வாங்க இது சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today: 6 reasons as to why you should buy gold currently

Gold price latest updates.. Gold price today: 6 reasons as to why you should buy gold currently
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X