உலகளவில், கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பிற வர்த்தகங்கள் நுகர்வோர் சந்தையில் மிகவும் சிறப்பாக இருந்தாலும், தங்கம் விற்பனை அனைத்து சந்தைகளிலும் மந்த நிலையை எதிர்கொண்டது.
ஆனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது, இதனால் செவ்வாய்க்கிழமை காலை முதல் தங்கத்தின் விலை உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் டாலர் ஆதிக்கம் குறைந்து பிற நாணயங்கள் கணிசமாக உயர்ந்த நிலையில், வெளிநாட்டு வர்த்தகர்களுக்குத் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமலும், விலை குறைவாகவும் கிடைத்துள்ளது.
ஸ்பாட் தங்கம் விலை
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 0.4% அதிகரித்து 1,804.71 டாலராக ஆக உள்ளது. அமெரிக்கக் கோல்டு பியூச்சர்ஸ் 0.5% உயர்ந்து 1,812.50 ஆக இருந்தது, டாலர் இன்டெக்ஸ் 0.2% சரிந்தது.
மேலும் மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1809 டாலராக உள்ளது.
எம்சிஎஸ் சந்தை
செவ்வாய்க்கிழமை மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் எம்சிஎஸ் சந்தையில் பிப்ரவரி 3ஆம் தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் பியூச்சர்ஸ் விலை 0.35 சதவீதம் அதிகரித்து 54,866 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மார்ச் 3ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளி விலை 1.41 சதவீதம் அதிகரித்து 70,051 ரூபாயாக உள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகை
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சர்வதேச சந்தைகளில் இருந்து முழுமையான வர்த்தக வெளிப்பாடுகள் இல்லாத காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலை திங்கள்கிழமை மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்தன.
அமெரிக்கப் பொருளாதாரம்
அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த கலப்புத் தரவுகள் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை பிறகு வெள்ளிக் கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை சரிவில் இருந்து மீண்டு வந்தது.சீனா மற்றும் தைவான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் தங்கம் முக்கிய மற்றும் பாதுகாப்பான உலோகங்களாக மாறியுள்ளது.
தங்கம் விலை
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை நிலையற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டாலர் மதிப்பில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1784-1772 டாலர் ஆதரவு விலையைக் கொண்ட நிலையில், தற்போது 1812-1822 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி ஆதரவு விலை
இதேபோலச் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை ஆதரவு 23.52-23.35 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படும் நிலையில், இதன் ரெசிஸ்டன்ஸ் விலை 23.98-24.15 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு
இதுவே ரூபாய் மதிப்பில் தங்கத்தின் ஆதரவு விலை 54,350-53,950 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் விலை 54,720 - 54,880 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் ஆதரவு விலை 68,250-67,580 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் விலை 69,420-69,780 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications