இன்றும் தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு?

கடந்த சில அமர்வுகளாக தங்க ஆபரணத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. காலை அமர்வில் சற்று ஏற்றம் கண்டாலும், மாலை நேரத்தில் மீண்டும் சரிவில் முடிவடைந்து வருகின்றது.

மொத்தத்தில் பெரியளவில் குறையாவிட்டாலும், சற்று குறைந்துள்ளதும் நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலை குறைந்திருப்பது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

தற்போது வலுவான அமெரிக்கா டாலர், தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இன்று வார இறுதியாதாலால் தங்கத்தில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் லாபத்தினை புராபிட் புக்கிங் செய்யலாம். இதனால் தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஆக விலை குறையும்போது வாங்கினால், இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்ச்.

கேண்டில் பேட்டர்ன்

கேண்டில் பேட்டர்ன்

தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில், வார கேண்டில் என பலவும் தங்கத்தின் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வார கேண்டில் பேட்டர்னில் விலை குறையும் விதமாக இருப்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்திருந்து வாங்கலாம்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

தங்க வர்த்தகர்கள் இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டாவினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உள்பட பல அதிகாரிகள், தற்போதைக்கு நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது தொடர்ந்து உறுதிபடுத்தி வரும் நிலையில், தற்போதைக்கு வட்டி விகிதம் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று பணவீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது தங்கம் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 3.40 டாலர்கள் அதிகரித்து, 1780.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 0.60% அதிகரித்து, 26.203 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 46,931 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 417 ரூபாய் அதிகரித்து, 68,150 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,435 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 35,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4 ரூபாய் குறைந்து, 4,840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 73.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 73,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. .

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது சற்று சரிந்துள்ள நிலையில் அதன் முக்கிய சப்போர்ட் லெவல் - 1764 - 1750 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1788 - 1800 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 46,660 - 46,500 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,055 - 47,280 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 67,200 - 66,800 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 68,200 - 68,500 ரூபாயாகும்

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+