மூன்றாவது நாளாக சரியும் தங்கம் விலை.. அடுத்த இலக்கு ரூ.49,500.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இந்திய சந்தையில் மூன்றாவது வர்த்தக நாளாக, இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

 இந்தியாவுக்கு உதவிய சவுதி அரேபியா.. பறந்து வரும் ஆக்சிஜன் டேக்.. அதானிக்கு நன்றி..! இந்தியாவுக்கு உதவிய சவுதி அரேபியா.. பறந்து வரும் ஆக்சிஜன் டேக்.. அதானிக்கு நன்றி..!

இந்த நிலையில் குறைவான விலையில் தங்கம் கிடைக்கிறது என்றால், அது மிக நல்ல விஷயம் தானே. அதிலும் சர்வதேச சந்தைகள் சற்று ஏற்றத்தில் உள்ள நிலையில், இந்திய சந்தைகள் சரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு? சாதக பாதகமான காரணங்கள் என்னென்ன? நீண்டகால நோக்கில் அடுத்து எப்படி இருக்கும்? வாங்கலாமா? வேண்டாமா? இன்று எப்படி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

சற்று சரிவில் சர்வதேச தங்கம் விலை

கடந்த இரண்டு அமர்வுகளாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2.65 டாலர்கள் அதிகரித்து, 1780.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் விலையை விட, இன்று காலை தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. வார கேண்டில் பேட்டர்னிலும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சற்று தடுமாறும் சர்வதேச வெள்ளி விலை

சற்று தடுமாறும் சர்வதேச வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது தற்போது 0.09% ஏற்றம் கண்டு, 26.098 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. வார கேண்டிலும் சற்று கீழாக தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 32 ரூபாய் குறைந்து, 47,500 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருவது நினைவுகூறத்தக்கது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 173 ரூபாய் குறைந்து, 68,501 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று குறைந்திருந்தாலும், குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வெள்ளியின் விலையும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று பெரியளவில் இதுவரை மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து 4,482 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 35,856 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும், இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4890 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 39,120 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது கடந்த நான்கு நாட்களில் இரு நாட்கள் 1700 ரூபாய் குறைந்தும், இன்றோடு கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 74 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தங்கத்தினை 47,700 - 47,900 என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 49,000 - 49,500 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ் விலை 47,000 ரூபாய்க்கு கீழாகவும் வைத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க பத்திர சந்தையானது சற்று லாபம் குறைந்துள்ள நிலையில், டாலரின் மதிப்பானது சற்றே வலுவிழந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1760 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1820 டாலர்களாகும். ஒரு வேளை தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்தால், அடுத்த சப்போர்ட் விகிதம் 1725 டாலர்களாகும்.

வர்த்தகர்கள் கவனம்

வர்த்தகர்கள் கவனம்

தங்க முதலீட்டாளர்கள் இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தினை கண்கானித்து வருகின்றனர். இதில் அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முக்கிய நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் வரலாமோ என்று எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். ஆக அதனை பொறுத்து தங்கத்தின் விலை பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் தேவை பாதிக்கும்

தங்கம் தேவை பாதிக்கும்

தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது மிக மோசமாக பரவி வருகின்றது. இதனால் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி விநியோகம்

தடுப்பூசி விநியோகம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வர இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி குறித்தான அறிவிப்புகளும் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது சந்தைக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், தற்போது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமே. ஏனெனில் முக்கிய காரணிகள் அனைத்தும் தங்கம் விலை ஏற்றம் காணவே சாதகமாக அமைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today: analyst said gold next target Rs.49,500

Gold price updates.. Gold price today: analyst said gold next target Rs.49,500
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X