Gold price update: இந்தியாவில் பல்வேறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக மத்திய அரசோ வரி அதிகரிப்பினை செய்துள்ளது. தங்கத்திற்கு மட்டும் அல்ல, வெள்ளி,வைரம் என பல விலையுயர்ந்த உலோகங்களுக்கும் விலை அதிகரிப்பினை செய்துள்ளது.
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் எதிர்பார்த்ததை போல, வட்டி விகிதமானது 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கோண்டு சந்தையானது பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
புதிய உச்சம்
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில், பட்ஜெட்டில் வெளியான அறிக்கையானது பெரும் ஏமாற்றத்தினை கொடுக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையில் தான் இந்திய ப்யூச்சர் சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. இது 10 கிராமுக்கு 58,000 ரூபாயினை தாண்டியுள்ளது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியானது அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு இறக்குமதியுடன் சேர்க்கும்போது வரி அதிகரிக்கும். இது தங்கம் விலையை ஊக்குவிக்கும். ஏற்கனவே சர்வதேச சந்தையில் விலையானது உச்சத்தில் உள்ள நிலையில், இது மேற்கொண்டு இந்தியாவில் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 25.50 டாலர்கள் அல்லது 1.30% அதிகரித்து, 1967.70 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே உள்ளது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 2.72% அதிகரித்து, 24.247 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது (ஏப்ரல் கான்ட்ராக்ட்) 10 கிராமுக்கு, 683 ரூபாய் அதிகரித்து, 58,568 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாவே காணப்படுகிறது. மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 1571 ரூபாய் அதிகரித்து, 71,433 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரித்து, நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 5475 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 43,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 66 ரூபாய் அதிகரித்து, 5973 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 528 ரூபாய் அதிகரித்து, 59,730 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.30 ரூபாய் அதிகரித்து, 77.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1300 ரூபாய் அதிகரித்து, 77,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications