தங்கம் விலை தொடர் சரிவு.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான தடுமாற்றத்தையும், பாதிப்புகளையும் பல்வேறு காரணங்களுக்காக எதிர்கொண்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அமெரிக்காவில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாகவும், சீனா, ஐரோப்பா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள காரணத்தாலும் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க்-கிற்கு அட்வைஸ் செய்த ஓலா சிஇஓ..! எலான் மஸ்க்-கிற்கு அட்வைஸ் செய்த ஓலா சிஇஓ..!

இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையும், டாலர் மதிப்பும் சரிந்துள்ளது. இந்தச் சரிவு இந்திய சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஐரோப்பிய பங்குச்சந்தை

ஐரோப்பிய பங்குச்சந்தை

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய பங்குச்சந்தை புதிய உச்சத்தை அடையக் காத்திருக்கும் போது கொரோனா தொற்றுக் கணிப்புகள் காரணமாகத் தங்கம் விலையும், டாலர் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கன்ஸ்யூமர் சென்டிமென்ட் இண்டெக்ஸ்

கன்ஸ்யூமர் சென்டிமென்ட் இண்டெக்ஸ்

இதற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்காவின் மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்ட் இண்டெக்ஸ் கடந்த 10 வருடத்தில் மோசமான சரிவைப் பதிவு செய்தது. இதன் மூலம் அமெரிக்காவின் கிரீன்பே காஜ் குறியீடு 2 மாத சரிவை எட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவின் நுகர்வோர் சந்தையின் தரவுகள் சர்வதேச முதலீட்டு சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தது. தற்போது கணிக்கப்பட்டதைப் போலவே டாலர் மதிப்பும் தங்கத்தின் விலையும் சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பிரச்சனை

ஆப்கானிஸ்தான் பிரச்சனை

கொரோனா தொற்று மட்டும் அல்லாமல் ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளது, அமெரிக்கா - சீனா இடையிலான பிரச்சனைகள் உருவாக்கியிருக்கும் வர்த்தக ஆபத்துகள் குறித்து நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern-ன் கருத்து ஆகியவையும் முதலீட்டுச் சந்தையைப் பாதித்துள்ளது. சமீபத்தில் தான் அமெரிக்க ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை

தங்கம் விலை

இப்படித் தங்கம் விலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரணிகள் பாதிக்கிறது. இதனால் தங்கம் விலை அடுத்த சில வாரங்களுக்கு உயர வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

நீண்ட கால முதலீடு நோக்கம்

நீண்ட கால முதலீடு நோக்கம்

இதனால் தங்கம் மீதான முதலீட்டை நீண்ட கால முதலீடாகப் பார்ப்பவர்களுக்குத் தற்போது செய்யும் முதலீடு அதிக லாபத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதலீடு செய்யும் சந்தையில் மிகவும் குறைவான விலையில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இந்நிலையில் இன்று காலை எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை உயர்வுடன் துவங்கினாலும் படிப்படியாகக் குறைந்து வந்தது, இதற்கு மிக முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள தொடர் சரிவு தான். இதன் மூலம் இந்தியச் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையின் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையின் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் அக்டோபர் மாத பியூச்சர்ஸ் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.05 சதவீதம் சரிந்து 46,915 ரூபாயாக உள்ளது. இன்று அதிகப்படியாக 46,828 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இதேபோல் ஸ்பாட் சந்தையில் அகமதாபாத் சந்தையில் 10கிராம் தங்கம் விலை 46,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளி விலை

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை அக்டோபர் மாத பியூச்சர்ஸ் சந்தையில் 0.75 சதவீதம் வரையில் சரிந்து 62,765 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதேபோல் ஸ்பாட் மார்கெட் பிரிவில் அகமதாபாத் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 63,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை தங்கம் விலை

சர்வதேச சந்தை தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,782.29 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் அமெரிக்கச் சந்தை, ஐரோப்பா, சீனா சந்தையின் கொரோனா நிலவரம் மற்றும் நுகர்வோர் நிலைப்பாடு ஆகியவை தங்கம் விலையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

தங்கம் விலை தொடர் சரிவு

தங்கம் விலை தொடர் சரிவு

இதன் மூலம் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,772.72 டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் சர்வதேசச் சந்தையில் தங்கம் மீதான முதலீடு மற்றும் அதன் விலை நிலவரம் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுகின்றனர்.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

இதே காரணத்திற்காக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 146.55 புள்ளிகள் உயர்வுடன் 55,583.84 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 31.85 புள்ளிகளை உயர்ந்து 16,560.95 புள்ளிகளை எட்டியுள்ளது.

3 மாதத்தில் தங்கம் விலை

3 மாதத்தில் தங்கம் விலை

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தங்கம் விலை பார்க்கும் போது தங்கம் மீது முதலீடு செய்வோருக்குத் தெளிவான முடிவை எடுக்க முடியும். ஜூன் மாதத்தில் 5.15 சதவீதம் வரையில் சரிந்த தங்கம் விலை ஜூலை மாதத்தில் 1.90 சதவீதம் அதிகரித்தது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 11 நாட்களைப் பார்க்கும் போது தங்கம் விலை 4.18 சதவீதம் கரெக்ஷனை பதிவு செய்துள்ளது.

3 மாதத்தில் வெள்ளி விலை

3 மாதத்தில் வெள்ளி விலை

தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜூன் மாதத்தில் 5.51 சதவீதம் சரிவு, ஜூலை மாதத்தில் 1.78 சதவீதம் சரிவு, ஆகஸ்ட் மாதத்தில் இதுநாள் வரையில் 7.81 சதவீதம் சரிவு அடைந்துள்ளது.

துபாய் தங்கம் விலை

துபாய் தங்கம் விலை

தங்கத்திற்குப் பெயர்போன துபாயில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 215 திர்ஹம் அதாவது இந்திய ரூபாய் படி 4,348.11 ரூபாய். இதேபோல் 22 கேரட் தங்கம் விலை துபாயில் 202.25 திர்ஹம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 4,085.51 ரூபாய் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today August 16: Gold rate fall on MCX amid global crisis and Weaker dollar

Gold price today August 16: Gold rate fall on MCX amid global crisis and a Weaker dollar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X