தங்கம் விலை: விரைவில் 50,000 ரூபாயை தொட வாய்ப்பு அதிகமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி வாங்குவதற்கு ஆள் எப்போதும் இருக்கும் அளவிற்கு இந்திய மக்கள் மத்தியில் அதிகளவிலான டிமாண்ட் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஒவ்வொரு மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து வருகிறது.

இதேவேளையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் காரணத்தால் தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் நகைக் கடைகளுக்குச் செல்லும் முன்பு சந்தை எப்படி உள்ளது..? தங்கம் விலை வாங்குவது சரியா..? என்பதைத் தெரிந்துகொண்டு செல்லுங்கள்.

லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் கிட்டதட்ட 300 புள்ளிகள் சரிவு..! லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் கிட்டதட்ட 300 புள்ளிகள் சரிவு..!

சாமானிய மக்கள் டூ பணக்காரர்கள்

சாமானிய மக்கள் டூ பணக்காரர்கள்

சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச்சந்தை வளர்ச்சி ஆகியவற்றின் எதிரொலியாக இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தங்கம் வாங்குவதில் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.

தங்கம் விலை சரிவின் அளவீடு

தங்கம் விலை சரிவின் அளவீடு

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் தற்போது தங்கம் விலை 2020 உச்ச விலையை விடவும் 9000 ரூபாயும், 2021ஆம் ஆண்டு உச்ச விலையை விடவும் 4000 ரூபாய் குறைவாக உள்ளதால் முதலீடு செய்யச் சூப்பரான வாய்ப்பு உருவாகியுள்ளது.

தங்கம் விலை கணிப்பு

தங்கம் விலை கணிப்பு

இதுமட்டும் அல்லாமல் அடுத்த சில வாரத்தில் தங்கம் விலை 50,000 ரூபாய் அளவீட்டைத் தொடும் எனக் கணிக்கப்படும் காரணத்தாலும் சேமிப்புக்காகத் தங்கத்தை வாங்குபவர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரையில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.

எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை

வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தக முடிவில் ஆக்டோபர் 5ஆம் தேதி முடியும் ஆர்டர்களின் விலை வெறும் 0.01 சதவீதம் மட்டுமே உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,174.00 ரூபாயாக உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலை வர்த்தக முடிவில் வெறும் 0.01 சதவீத உயர்வுடன் முடிந்துள்ளது.

ஸ்பாட் மார்கெட் சந்தை விலை

ஸ்பாட் மார்கெட் சந்தை விலை

மேலும் ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,078 ரூபாயாக உள்ளது. இது MMTC-PAMP தளத்தில் 1 கிராம் 24 கேரட் விலை 4875.19 ரூபாயாக உள்ளது. இத்தளத்தில் 10 கிராம் தங்கம் 48,751.90 ரூபாய் அளவில் உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தை வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தை வெள்ளி விலை

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையின் வர்த்தக முடிவில் 1 கிலோ வெள்ளி விலை எதிர்பார்க்காத வகையில் செப்டம்பர் 3ஆம் தேதி முடியும் ஆர்டர் விலை 0.69 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி விலை 61,706 ரூபாயாகக் குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் உயர்வுடன் காணப்பட்ட வெள்ளி விலை சரிந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த 3 மாதத்தில் சுமார் 200 டாலர் வரையில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,786 டாலரில் இருந்து 1,781.75 டாலர் வரையில் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, சீனாவில் டெக் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் ஐரோப்பிய சந்தை எனப் பெரும்பாலான சந்தைகள் பல காரணங்களுக்காக முதலீடுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தைக்கே தள்ளி வரும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது.

தங்கம் விலை வரலாறு

தங்கம் விலை வரலாறு

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 கிராம் தங்கத்தின் வருடாந்திர சராசரி விலை இது தான், நீங்கள் பிறந்த வருடம் அல்லது திருமணமான வருடத்தில் தங்கம் விலையைப் பாருங்க.

1964 ஆண்டு - 63.25 ரூபாய்
1965 ஆண்டு - 71.75 ரூபாய்
1966 ஆண்டு - 83.75 ரூபாய்
1967 ஆண்டு - 102.50 ரூபாய்
1968 ஆண்டு - 162 ரூபாய்
1969 ஆண்டு - 176 ரூபாய்
1970 ஆண்டு - 184 ரூபாய்
1971 ஆண்டு - 193 ரூபாய்
1972 ஆண்டு - 202 ரூபாய்
1973 ஆண்டு - 278.50 ரூபாய்
1974 ஆண்டு - 506 ரூபாய்
1975 ஆண்டு - 540 ரூபாய்
1976 ஆண்டு - 432 ரூபாய்
1977 ஆண்டு - 486 ரூபாய்
1978 ஆண்டு - 685 ரூபாய்
1979 ஆண்டு - 937 ரூபாய்
1980 ஆண்டு - 1,330 ரூபாய்
1981 ஆண்டு - 1,800 ரூபாய்
1982 ஆண்டு - 1,645 ரூபாய்
1983 ஆண்டு - 1,800 ரூபாய்
1984 ஆண்டு - 1,970 ரூபாய்
1985 ஆண்டு - 2,130 ரூபாய்
1986 ஆண்டு - 2,140 ரூபாய்
1987 ஆண்டு - 2,570 ரூபாய்
1988 ஆண்டு - 3,130 ரூபாய்
1989 ஆண்டு - 3,140 ரூபாய்
1990 ஆண்டு - 3,200 ரூபாய்
1991 ஆண்டு - 3,466 ரூபாய்
1992 ஆண்டு - 4,334 ரூபாய்
1993 ஆண்டு - 4,140 ரூபாய்
1994 ஆண்டு - 4,598 ரூபாய்
1995 ஆண்டு - 4,680 ரூபாய்
1996 ஆண்டு - 5,160 ரூபாய்
1997 ஆண்டு - 4,725 ரூபாய்
1998 ஆண்டு - 4,045 ரூபாய்
1999 ஆண்டு - 4,234 ரூபாய்
2000 ஆண்டு - 4,400 ரூபாய்
2001 ஆண்டு - 4,300 ரூபாய்
2002 ஆண்டு - 4,990 ரூபாய்
2003 ஆண்டு - 5,600 ரூபாய்
2004 ஆண்டு - 5,850 ரூபாய்
2005 ஆண்டு - 7,000 ரூபாய்
2006 ஆண்டு - 8,400 ரூபாய்
2007 ஆண்டு - 10,800 ரூபாய்
2008 ஆண்டு - 12,500 ரூபாய்
2009 ஆண்டு - 14,500 ரூபாய்
2010 ஆண்டு - 18,500 ரூபாய்
2011 ஆண்டு - 26,400 ரூபாய்
2012 ஆண்டு - 31,050 ரூபாய்
2013 ஆண்டு - 29,600 ரூபாய்
2014 ஆண்டு - 28,006.50 ரூபாய்
2015 ஆண்டு - 26,343.50 ரூபாய்
2016 ஆண்டு - 28,623.50 ரூபாய்
2017 ஆண்டு - 29,667.50 ரூபாய்
2018 ஆண்டு - 31,438 ரூபாய்
2019 ஆண்டு - 35,220 ரூபாய்
2020 ஆண்டு - 48,651 ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today August 21: Gold rate may cross 50000 mark sooner, Check 60 yrs of gold price history

Gold price today August 21: Gold rate may cross 50000 mark sooner, Check 60 yrs of gold price history
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X