கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது கண்ட ஏற்றத்தினையடுத்து, இது இப்படியே ஏற்றம் காணுமோ? இனி குறையவே குறையாதா?
குறிப்பாக இந்திய சந்தையில் எப்படியிருக்கும்? இனி விழாக்கால பருவம் தொடங்கவுள்ள நிலையில், பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்குமே. அப்போது விலை அதிகரிக்குமா? இப்பவே வாங்கிவிடலாமா? அடுத்து என்ன செய்யலாம்.
இதற்கிடையில் நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்கள் சொல்வதைப் போல கடந்த ஆண்டு உச்சத்தினை உடைக்குமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு குறித்த அச்சம்
தற்போதும் கூட கொரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடாக இல்லை. எனினும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வரும் நிலையில், அது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சில நிபுணர்கள் தடுப்பூசி போடப்படும் விகிதத்தினை பொறுத்து தான், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதமும் இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
தேவை அதிகரிக்கலாம்
ஒரு புறம் கொரோனா மூன்றாம் அலை குறித்தான அச்சம் நிலவி வந்தாலும், மறுபுறம் பயமே இல்லாமல் மக்கள் கடைதெருக்களில், நகைக்கடைகளில் குவிந்து வருவதையும் பார்க்க முடிகிறது. இது கொரோனா அச்சம் இருந்தாலும், மக்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வத்தினையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்திலும் தேவையை ஊக்குவிக்கும் என்றே நகைக் கடை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம் அதிகரிக்கலாம்
தங்கம் விலையானது தற்போது ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராமுக்கு 9,700 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏனெனில் குறைந்த விலையானது, முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க ஆர்வத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் வலிமை
கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது குறையாவிட்டாலும், வலுவான ஒரு நிலையான இடத்திலேயே காணப்பட்டது. இது அமெரிக்காவின் வேலை குறித்தான தரவுகள் சந்தைக்கு எதிராக வந்த நிலையில், அது டாலரின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தியது. இதனால் தங்கம் விலையானது சற்று வலுவான ஏற்றத்திலேயே கடந்த அமர்வில் முடிவடைந்தது.
தங்கத்தின் முக்கிய லெவல்
இதற்கியிடையில் அமெரிக்காவில் ஒரு புறம் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வரும் நிலையில், அவுன்ஸூக்கு 1835 டாலர்களை உடைத்தால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
வெள்ளியின் தேவை அதிகரிக்கலாம்
இதே வெள்ளியின் விலை பற்றி எடுத்துக் கொண்டால், தொழிற்துறைகள் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், வெள்ளியின் தேவையும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. வெள்ளியின் ஆபரணத் தேவையும் விழாக்கால பருவத்தில் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Array
அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்பினை விரைவில் வெளியிடலாம் என்ற நிலையில், இது மக்கள் கையில் அதிக பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும். இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம். ஆக இது முதலீட்டு ரீதியிலாக தங்கத்தின் தேவையினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி அதிகரிப்பு
இந்தியாவினை பொறுத்தவரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனை நிருபிக்கும் விதமாக தங்கத்தின் இறக்குமதியானது கடந்த மாதம் உச்சத்தினை தொட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே தற்போது இருந்து வருகின்றது. இது ஆபரணத் தங்கத்தின் தேவை அதிகரிக்கும், என்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நகை கடை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 6.35 டாலர்கள் குறைந்து, 1827.15 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் 1,833.70 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1832.20 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்த விலை, உச்ச விலை என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலை சரிவினைக் கண்டிருந்தாலும், வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.14% ஏற்றம் கண்டு, 24.843 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 114 ரூபாய் குறைந்து, 47,413 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 47,524 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 47,433 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது சற்று குறைந்துள்ள நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்றும் இரண்டாவது நாளாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 148 ரூபாய் அதிகரித்து, 65,357 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 65,209 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 65,307 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது நடப்பு வாரத்தின் முதல் நாளான இன்றே சற்று சரிவில் காணப்படுகின்றது. இது நகை ஆர்வலர்களுக்கு மிக நல்ல விஷயம் எனலாம். இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, 4,479 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,832 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,886 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 39,088 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,860 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 69.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 696 ரூபாயாகவும், கிலோவுக்கு 69,600 ரூபாயாகவும் உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் காணப்படும் நிலையில், செல்லிங் நல்ல ஆப்சன் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications