மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்.. நிபுணர்களின் கணிப்பு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக இந்தியாவில் தங்கம் என்றாலே ஒரு பாதுகாப்பான கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது, ஆரம்பத்தில் வெறும் ஆபரணமாக மட்டுமே பார்க்கப்பட்ட தங்கம், இன்று முதலீடுகளிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளதாக மாறியுள்ளது.

குறிப்பாக பேப்பர் தங்கம் எனப்படும் தங்க பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம் எனப்படும் கோல்டு இடிஎஃப், எம்சிஎக்ஸ் தங்கம் என பல வகையிலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இன்றைய போர்ட்ஃபோலியோ முதலீடுகளில் தங்கத்திற்கு கணிசமான இடம் உண்டு என்பது மறுப்பதற்கில்லை. அந்தளவுக்கு இந்தியர்களின் வாழ்க்கையிலும், முதலீடுகளிலும் தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 சீனா இடத்தை பிடிக்க இந்தியா திட்டம்.. தைவான் உடன் கூட்டணி..! சீனா இடத்தை பிடிக்க இந்தியா திட்டம்.. தைவான் உடன் கூட்டணி..!

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

அப்படிப்பட்ட தங்கத்தின் மதிப்பானது நேற்று சற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று மீண்டும் சரிவினை காணத் தொடங்கியுள்ளது. இது இன்னும் சரிவினை காணுமா அல்லது அதிகரிக்குமா? இனி எப்படி இருக்கும் என பல்வேறு சந்தேகங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதோடு இன்றைய சர்வதேச தங்கத்தின் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன தங்கத்திற்கு சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கருத்துகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

தங்கம் விலையானது வலுவான டாலரின் மதிப்புக்கு இடையில் மீண்டும் சரிவை காண ஆரம்பித்துள்ளது. இதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுத்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது.

பத்திரம் வாங்குதல் குறையலாம்

பத்திரம் வாங்குதல் குறையலாம்

கடந்த முறை பெடரல் வங்கியின் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், அமெரிக்காவின் பத்திரம் வாங்குதல் என்பது படிப்படியாக நவம்பர் மாதம் தொடங்கி குறைக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் இது குறித்தான முக்கிய முடிவுகள் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆக இது மேலும் தங்கத்திற்கு இது சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அதே போல வரவிருக்கும் நாட்களில் வேலை விகிதம் குறித்தான தரவும் வெளியாக உள்ளது. இதுவும் சந்தையில் பிரதிபலிக்கலாம் என்ற நிலையில், தற்போதைக்கு தங்கம் விலை குறைந்தாலும் நீண்டகால நோக்கில் இந்த தரவுகளை பொறுத்து அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மீடியம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி விகிதம் தொடர்ந்து அமெரிக்காவில் குறைவாகவே இருந்து வருகிறது. பத்திரம் வாங்குதல் குறையலாம் என்று அமெரிக்காவின் மத்திய வங்கி கூறியிருந்தாலும், வட்டி விகிதம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆக தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்ற கருத்து நிலவி வருகிறது.

பாதுகாப்பு புகலிடத்துக்கு சாதகம்

பாதுகாப்பு புகலிடத்துக்கு சாதகம்

இது பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இதுவும் டாலருக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடையலாம் என்ற நிலையில், பணவீக்கம் குறித்த கவலையும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்திற்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

விழாக்காலம் வருவதையொட்டி இந்திய சந்தையில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தின் விலை குறைவாக உள்ள நிலையில் இதனை வாங்கி வைக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது. இதுவும் தங்கத்திற்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்தின் விலையில் தாக்கத்தினை நீண்டகால நோக்கில் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து வீழ்ச்சி

உச்சத்தில் இருந்து வீழ்ச்சி

குறிப்பாக இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும்போது, 10,250 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் வரலாற்று உச்சத்தில் இருந்து 17,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 4.05 டாலர்கள் குறைந்து, 1747.95 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.41% விலை கண்டு, 22.598 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 124 ரூபாய் குறைந்து, 45,945 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 46,069 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,071 ரூபாயாகவும் தொடங்கியது. கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 226 ரூபாய் குறைந்து, 60,408 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 60,634 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 60,572 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 4,355 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இது நகை ஆர்வலர்களுக்கு வாங்க சரியான நேரம் எனலாம்.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இன்று கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து, 4,751 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 38,008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 64.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 647 ரூபாயாகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 64,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today down amid strong dollar, rising bond yields

Gold price latest updates.. Gold price today down amid strong dollar, rising bond yields
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X