சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. 6 நாட்களுக்கு பிறகு சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. வாங்கலாமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆறு அமர்வுகளாக தங்கம் விலையானது தொடர்ச்சியான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது எனலாம்.

 

மொத்தத்தில் பெரியளவில் குறையாவிட்டாலும், சற்று குறைந்துள்ளதும் நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது சற்று குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

எல்லை மீறி போகும் பெட்ரோல் விலை.. 100ஐ தொட்டும் 2வது நாளாக தொடரும் விலை உயர்வு..!

ஏனெனில் நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலை குறைந்திருப்பது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

தற்போது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிந்துள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது. மீடியம் டெர்மில் இன்னும் சற்று வலுவாகவே தங்கம் விலையானது சரிய வாய்ப்புள்ளதாக நிபுணர்களும் கணித்துள்ளனர்.

அமெரிக்க பத்திர சந்தை சரிவு

அமெரிக்க பத்திர சந்தை சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவாக காணப்பட்டாலும், அமெரிக்க பத்திர சந்தையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரில் அழுத்தத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இது அதிகளவிலான தங்கம் விலை சரிவினை தடுக்கலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் கட்ட கொரோனா பரவல் அச்சம்
 

மூன்றாம் கட்ட கொரோனா பரவல் அச்சம்

தற்போது பல நாடுகளிலும் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த கட்ட பரவாலாக இருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது. இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் முதலீட்டாளர்களின் உணர்வு தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக இருந்தால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற எண்ணமே நிலவி வருகின்றது.

முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம்

முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம்

கடந்த ஆறு அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது வியாழக்கிழமை என்பதாலும், இன்று மாலை வெளியாகவிருக்கும் முக்கிய டேட்டாக்களினால் சந்தை சரியலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. அதோடு வார இறுதியாதலால் தங்கத்தில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் லாபத்தினை புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

கேண்டில் பேட்டர்ன்

கேண்டில் பேட்டர்ன்

தினசரி கேண்டில், 5 மணி நேர கேண்டில் என பலவும் தங்கத்தின் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்திருந்து தங்கத்தினை வாங்கலாம். மேலும் இது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 8000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.25 டாலர்கள் குறைந்து, 1796.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது 1794 டாலர்களை உடைத்தால் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மிடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 0.41% குறைந்து, 26.023 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து, 47,710 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேறைய குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 424 ரூபாய் குறைந்து, 68,941 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,510 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 36,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,920 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 39,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 60 பைசா குறைந்து, 73.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 73,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. .

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது சற்று சரிந்துள்ள நிலையில் அதன் முக்கிய சப்போர்ட் லெவல் - 1790 - 1781 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1810 - 1820 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 47,700 - 47,500 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 48,100 - 48,400 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 68,770 - 68,200 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 70,000 - 70,500 ரூபாயாகும்

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today down for first time after 6 days, is it good time to buy gold now?

Gold price today updates.. Gold prices today also down, is it good time to buy gold?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X