உச்சத்தில் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. கிட்டதட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் உச்சத்தினை எட்டியுள்ளது.

இது குறையவே குறையாதா? போகிற போக்கினை பார்த்தால் கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடும்போல?

இது இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும். தற்போது தங்கம் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், தற்போது அவுன்ஸூக்கு 8.75 டாலர்கள் அதிகரித்து, 1914.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது தற்போது வரையில் மட்டும் 1.17% அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 0.323 டாலர்கள் அதிகரித்து, 28.335 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமரிவின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. இதுவும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ்-சில் தங்கம் நிலவரம்

எம்சிஎக்ஸ்-சில் தங்கம் நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தையில் நடப்பு காண்டிராக்டில் தற்போது 10 கிராமுக்கு 159 ரூபாய் அதிகரித்து, 48,980 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் நீண்ட கால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ்-சில் வெள்ளி நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் நல்ல ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 642 ரூபாய் அதிகரித்து, 72,540 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 4,639 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 37,112 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரண தங்கம் விலையானது தொடர்ச்சியாக 4 நாட்களாக ஏற்றம் கண்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த நான்கு தினங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது தற்போது கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 5,060 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 40,480 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 0.50 பைசா அதிகரித்து, 77.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 77,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையும் தொடர்ச்சியாக கடந்த 5 தினங்களாகவே ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது தற்போது கிட்டதட்ட 49,000 ரூபாய் என்ற லெவலில் இருக்கும் நிலையில், மீடியம் டெர்மில் இது 50,000 ரூபாயினை விரைவில் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த மார்ச் மாதத்தில் 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதிலிருந்து பார்க்கும்போது, தற்போது சுமார் 7,000 சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால் நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கமானது, இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பணவீக்கம் பற்றிய கவலைகள் பெரியளவில் விரிவடைந்துள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் வட்டி விகிதமானது இன்னும் குறைவாகவே உள்ளது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்கா டாலரின் மதிப்பானது சற்றே சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது 0.26% சரிந்து 89.757 டாலர்களாக காணப்படுகிறது. இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கம் விலையை குறைவாக வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.

Array

Array

தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் 1875 டாலர்களாகும். இதே உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவல் 1925 டாலர்களாகவும். ஏற்கனவே தங்கம் விலையானது கிட்டதட்ட 1920 டாலர்களை நெருங்கியுள்ளது. இதனையடுத்து 1970 முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும் பார்க்கப்படுகிறது. இதே வெள்ளியின் சப்பொர்ட் லெவல் 70,080 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 74,200 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வாங்கலாமா?

இன்று வாங்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. ஆக இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தங்கம் விலையானது 48,300 - 51, 200 என்ற லெவலில் இருக்கலாம் என கேப்பிட்டல்வயா நிறுவனம் கணித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+