இந்தியாவில் தங்கம் விலை அட்சய திருதியை பண்டிகை காரணமாக கடந்த 4 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சர்வதேச சந்தை விலைக்கு இணையாகவும், தற்காலிகமாக உயர்ந்த தங்கத்திற்கான டிமாண்ட் ஆகியவை நீங்கி தங்கம் விலை குறைய துவங்கியுள்ளது. இதனால் சேமிப்புக்காக தங்க நகை வாங்குவோர் நம்மதி அடைந்துள்ளனர்.
தங்கம் வாங்குவது சிறப்பான முதலீடாக இருக்காது என பலர் கூறி கேட்கும் வேளையில், இந்தியா முதல் அமெரிக்கா வரை அரசுகளே பணபுழக்கத்தையும் கட்டுப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் தங்கத்தை வாங்கி மலை மலையாய் குவித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை 4- 8 சதவீதம் வரையில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த 5 வருடத்தில் சராசரியாகவே அதிகப்படியாக உயர்ந்தது.

இந்த நிலையில் அட்சய திருதியை பண்டிகை காரணமாக இந்தியாவில் தங்கத்திற்கு அதிகமாக டிமாண்ட் இருந்த காரணத்தால் கடந்த 4 நாட்களில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. ஆனால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தைக்கு இணையாக தங்கம் விலையில் மாற்றம் உருவாகியுள்ளது.
OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்த பின்பு அமெரிக்காவில் பணிவீக்கம் அதிகரிக்க துவங்கியது மட்டும் அல்லாமல் ரீடைல் விற்பனை சந்தையும் கடுமையான பாதிப்பை கொண்டு உள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தும் திட்டம் வைத்துள்ளது என்ற கணிப்பு வெளியாகியுள்ள காரணத்தால் சர்வதேச முதலீட்டு சந்தையில் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 2000 டாலர் என்ற அளவீட்டை இழந்து 1977 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் MCX சந்கையில் ஜூன் மாதத்திற்கான ஆர்டர் விலை 0.12 சதவீதம் சரிந்து பல நாட்களுக்கு பின்பு 59774.00 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 56,150 ரூபாய், மும்பை - 55,650 ரூபாய், டெல்லி - 55,750 ரூபாய், கொல்கத்தா - 55,650 ரூபாய், பெங்களூர் - 55,700 ரூபாய், ஹைதராபாத் - 55,650 ரூபாய், கேரளா - 55,650 ரூபாய், புனே - 55,650 ரூபாய், பரோடா - 55,700 ரூபாய், அகமதாபாத் - 55,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,750 ரூபாய், லக்னோ - 55,750 ரூபாய், கோயம்புத்தூர் - 56,150 ரூபாய், மதுரை - 56,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : சென்னை - 61,250 ரூபாய், மும்பை - 60,710 ரூபாய், டெல்லி - 60,860 ரூபாய், கொல்கத்தா - 60,710 ரூபாய், பெங்களூர் - 60,760 ரூபாய், ஹைதராபாத் - 60,710 ரூபாய், கேரளா - 60,710 ரூபாய், புனே - 60,710 ரூபாய், பரோடா - 60,760 ரூபாய், அகமதாபாத் - 60,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,860 ரூபாய், லக்னோ - 60,860 ரூபாய், கோயம்புத்தூர் - 61,250 ரூபாய், மதுரை - 61,250 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : சென்னை - 44920 ரூபாய், மும்பை - 44520 ரூபாய், டெல்லி - 44600 ரூபாய், கொல்கத்தா - 44520 ரூபாய், பெங்களூர் - 44560 ரூபாய், ஹைதராபாத் - 44520 ரூபாய், கேரளா - 44520 ரூபாய், புனே - 44520 ரூபாய், பரோடா - 44560 ரூபாய், அகமதாபாத் - 44560 ரூபாய், ஜெய்ப்பூர் - 44600 ரூபாய், லக்னோ - 44600 ரூபாய், கோயம்புத்தூர் - 44920 ரூபாய், மதுரை - 44920 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : சென்னை - 80000 ரூபாய், மும்பை - 76400 ரூபாய், டெல்லி - 76400 ரூபாய், கொல்கத்தா - 76400 ரூபாய், பெங்களூர் - 80000 ரூபாய், ஹைதராபாத் - 80000 ரூபாய், கேரளா - 80000 ரூபாய், புனே - 76400 ரூபாய், பரோடா - 76400 ரூபாய், அகமதாபாத் - 76400 ரூபாய், ஜெய்ப்பூர் - 76400 ரூபாய், லக்னோ - 76400 ரூபாய், கோயம்புத்தூர் - 80000 ரூபாய், மதுரை - 80000 ரூபாய்.


Click it and Unblock the Notifications