உச்சத்தில் இருந்து ரூ.2200 சரிந்த தங்கம் விலை.. இது வாங்க நல்ல சான்ஸ் தானா?

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து அழுத்தத்தில் இருந்து வரும் நிலையில், விலை மேற்கொண்டு வரும் நாட்களில் குறையுமா? இது வாங்க சரியான நேரமா? இன்று காலை தொடக்கத்திலேயே தங்கம் விலையானது அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.

இன்று தங்கம் விலையான இன்ட்ராடே லோவாக 10 கிராமுக்கு 56,602 ரூபாயாக தொட்டுள்ளது. இது கடந்த வியாழக்கிழமை முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 0.40% சரிவினைக் கண்டுள்ளது.

வாங்க சரியான வாய்ப்பு

வாங்க சரியான வாய்ப்பு

கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து சற்றே குறைந்து காணப்படுகின்றது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தை, தொடர்ந்து ஏற்றத்தில் உள்ள டாலரின் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சரிவுக்கு என்ன காரணம்?

சரிவுக்கு என்ன காரணம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே டாலர், பத்திர சந்தை ஏற்றம் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. அதோடு ஒவர்சோல்டு லெவலில் காணப்படுகின்றது. அதோடு புராபிட் புக்கிங்கும் இருந்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

ஐஐஎஃப்எல் நிறுவனம் தங்கத்தின் உடனடி சப்போர்ட் லெவல் 1860 டாலராக நிர்ணயம் செய்துள்ளது. இதனை உடைக்கும்பட்சத்தில் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1835 டாலராகவும் கணித்துள்ளது. இதே ஏற்றம் காணம் பட்சத்தில் 1890 டாலர் என்ற லெவலை எட்டலாம் என கணித்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதோடு சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதாரம் என்பது சரிவில் காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

தாக்கத்தினை ஏற்படுத்துமா?

தாக்கத்தினை ஏற்படுத்துமா?

எனினும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பெடரல் ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொருளாதார மந்த நிலை அச்சத்தின் மத்தியில் வட்டி விகிதம் மீண்டும் அதிகரிக்குமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது தங்கம் விலையில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்துமா? அழுத்தத்தினை ஏற்படுத்துமா? வாருங்கள் பார்க்கலாம்.

நிபுணர்கள் பரிந்துரை

நிபுணர்கள் பரிந்துரை

எனினும் நிபுணர்கள் தங்கத்தினை 56,600 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இதன் மீடியம் டெர்ம் இலக்கு விலையானது 57,100 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலை 56,350 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.2200 சரிவு

ரூ.2200 சரிவு

எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் நிபுணர்கள் இது குறித்த கணிப்பு எதனையும் விட வில்லை. இதற்கான இலக்கினையும் நிர்ணயம் செய்யவில்லை. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 2200 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக இதுவே நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+