கடந்த சில அமர்வுகளாக தங்கம் விலையானது தொடர்ச்சியான ஏற்றத்தினை கண்ட நிலையில், நேற்று பலமான சரிவினைக் கண்டது. இதனை தொடர்ந்து இன்றும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.
இது விலை குறையாவிட்டாலும், பெரியளவில் மாற்றமில்லாமல் இருப்பதே நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், தங்கம் விலை குறைந்திருப்பது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.65 டாலர்கள் அதிகரித்து, 1,800.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மிடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போலவே இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 68,662 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலையானது 30 ரூபாய் குறைந்து, 4,520 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, 36,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 33 ரூபாய் குறைந்து, 4,931 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து, 39,448 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
இதே ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 70 பைசா குறைந்து, 73.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 73,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. .
மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?
தற்போது மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் பெரிய மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய நினைக்கலாம். இதனால் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்துள்ள நிலையில், அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி தான் தற்போது சர்வதேச சந்தையிலும் காணப்படுகிறது. அதோடு அமெரிக்க பத்திர சந்தையானது சற்று சரிவில் காணப்படுவதும், தங்கத்திற்கு சாதமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரில் அழுத்தத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உருமாறிய கொரோனா அச்சம்
தற்போது பல நாடுகளிலும் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் பல மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது அடுத்த கட்ட பரவலாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது. இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படியிருப்பினும் முதலீட்டாளர்களின் உணர்வு தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக இருந்தால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற எண்ணமே நிலவி வருகின்றது.
புராபிட் புக்கிங் செய்யலாம்
இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், இன்று மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலையேற்றத்தினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக சந்தையில் தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
கேண்டில் பேட்டர்ன்
தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், தற்போது சற்று அதிகரித்து காணப்பட்டாலும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள், நீண்டகால முதலீட்டாளர்கள் திங்கட்கிழமையன்று வர்த்தகத்தினை பொறுத்து வாங்கலாம்.
தங்கத்தின் முக்கிய லெவல்கள்
இந்திய சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் லெவல் 47,500 - 47,330 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,980 - 48,155 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 68,500 - 68,100 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 69,400 - 69,900 ரூபாயாகும்
தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது இன்று பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் திங்கட்கிழமையன்று வர்த்தகத்தினை பொறுத்து வாங்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!



Click it and Unblock the Notifications