2வது நாளாக குறையும் தங்கம் விலை.. இது சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது (gold) தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்திய சந்தையில் இரண்டாவது நாளாக சற்று சரிவினைக் கண்டு வருகின்றது.

இது குறைந்த விலையில் தங்கம் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக கடந்த 4 அமர்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஆக இதுவும் சற்று சரிவினைக் காணலாம். இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

கடந்த சில தினங்களாகவே சற்றே ஆறுதல் கொடுக்க கூடிய விஷயம் என்னவெனில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் எண்ணிக்கையானது குறைந்து வருகின்றது. உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் தவித்து வருகின்றன. பல நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நிதி நெருக்கடி, பணவீக்கம் என பல காரணிகளால் தவித்து வருகின்றன. இதற்கிடையில் பாதுகாப்பினை காரணம் காட்டி, மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை முதலீட்டாளர்கள் செய்யலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

comex சந்தையில் தங்கம் விலை

comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.85 டாலர்கள் அதிகரித்து, 1868.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சம், குறைந்தபட்ச விலை என இரண்டினையும் உடைக்கவில்லை. பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

comex சந்தையில் வெள்ளி விலை

comex சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், வெள்ளியின் விலை சற்று சரிவில் காணப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. டோஜியின் குறைந்த விலையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு 0.74% குறைந்து 28.122 டாலர்களாக காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இதே இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இரண்டாவது அமர்வாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 48,258 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருப்பதால், சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், இன்று கிலோவுக்கு 664 ரூபாய் குறைந்து, 72,532 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,577 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து 36,616 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 2 ரூபாய் அதிகரித்து, 4,992 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து 39,936 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

எனினும் வெள்ளி விலையினை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 77.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

டாலர் Vs ரூபாய் மதிப்பு

டாலர் Vs ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலரின் மதிப்பானது சற்றே குறைந்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று வலுவடைந்து காணப்படுகிறது. இது தங்கத்திற்கு எதிராக காணப்படுகிறது. டாலரின் மதிப்பு சரிவால், சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது வரையில் ஏற்றம் காணாவிட்டாலும், குறையாமல் காணப்படுகிறது. ஆனால் இந்திய சந்தையில் சற்று சரிந்து காணப்படுகிறது.

Array

Array

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் 1855 - 1900 டாலர்கள் என்ற லெவலியே இருக்கலாம். இதே இந்திய சந்தையில் 48,230 - 48,950 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம்,
இதே இந்திய சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள் 48,180 - ,48,055 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,660 - 48,800 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 72,700 - 72,200 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 73,900 - 74,500 ரூபாயாகும்

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today: gold price falling second day in MCX

Gold price today: Gold price today: gold price falling second day in MCX
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X