சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. 4 நாட்களுக்கு பிறகு சரிவு.. வெள்ளி நிலவரம் என்ன?

சமீபத்திய நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகின்றது.

குறிப்பாக சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக கடந்த ஐந்து அமர்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதே இந்திய சந்தையில் தங்கம் விலையானது 4 நாட்களுக்கு பிறகு இன்று சரிவினைக் கண்டுள்ளது. இது உண்மையில் முதலீட்டாளர்களும், தங்க ஆர்வலர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இதற்கிடையில் பாதுகாப்பினை காரணம் காட்டி, மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை முதலீட்டாளர்கள் குவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இன்றளவிலும் தங்கம் ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

உச்சம் தொடும் கொரொனா

உச்சம் தொடும் கொரொனா

இன்றைய நாளிலும் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் கொரோனாவின் காரணமாக, பொருளாதாரம் என்னவாகுமோ? தொழில் துறை என்னவாகுமோ? என்ற கவலை எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் பொருளாதாரம் குறித்த கணிப்புகளும் மீண்டும் பின்னடைவை நோக்கி வந்து கொண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

comex சந்தையில் தங்கம் விலை

comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.35 டாலர்கள் குறைந்து, 1835.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ள நிலையில், இன்று தடுமாற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

comex சந்தையில் வெள்ளி விலை

comex சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று சரிவில் காணப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்றுப பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து 27.473 டாலர்களாக காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இதே இந்திய சந்தையினை பொறுத்த வரையில் 4 நாட்களுக்கு பிறகு, தங்கம் விலை இன்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 191 ரூபாய் குறைந்து, 47,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருப்பதால், சற்று பொறுத்திருந்து வாங்கலாம். அதோடு முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையானது 47,755 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையானது 47,759 ரூபாயாகவும் உள்ளது. இதனை உடைக்கும்பட்சத்தில் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு 71 ரூபாய் குறைந்து, 71,477 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 4,520 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 36,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே இந்திய சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள் 47,800 - 47,580 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,055 - 48,250 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 71,100 - 70,400 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 72,000 - 72,700 ரூபாயாகும்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,931 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 39,448 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து, ஒரு நாள் தவிர, மற்ற நாட்கள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டும், மாற்றமில்லாமலும் இருந்து வருகின்றது. எனினும் இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 76 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 76,000 ரூபாயாகவும் காணப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்ப்பினை விட அமெரிக்காவின் வேலை சந்தையானது வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றது. எப்படியிருப்பினும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம். இதனால் சந்தை சற்று சரிவினைக் கண்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Array

Array

தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள் 1824 - 1810 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1850 - 1866 டாலர்களாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 27.20 - 26.70 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 27.84 - 28.20 டாலர்களாகும்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+