உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000 சரிவு.. வாங்கலாமா? இன்னும் குறையுமா...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில், காலை நேரத்தில் சற்று சரிந்திருந்த நிலையில் மாலை நேரத்தில் மீண்டும் ஏற்றம் கண்டது. இதனையடுத்து இன்றும் தடுமாற்றத்தில் காணப்படுகிறது. ஆக தற்போது வாங்கலாமா? வேண்டாமா? இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பற்றித் தான் இதில் பார்க்க விருக்கிறோம்.

அமெரிக்காவின் பத்திர லாபம் வீழ்ச்சியடைந்ததையடுத்து, அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது. இதனையத்து பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..! கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

சமீபத்திய நாட்களில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று குறைந்தாலும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விடுகின்றது. அதற்கேற்றாற்போல பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. இந்த நிலையில் இன்றைய நிலவரம் என்ன? நீண்டகால நோக்கில் இன்று வாங்கலாமா? வேண்டாமா? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.10 டாலர்கள் குறைந்து, 1897.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் வாங்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்றுப பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். எனினும் நீண்டகால நோக்கில வாங்கலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து 27.887 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 49,155 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது 7,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தங்கம் விலையும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. மேலும் முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை குறையாவிட்டாலும், இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 231 ரூபாய் குறைந்து, 71,586 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4,630 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 37,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 26 ரூபாய் அதிகரித்து, 5,050 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 40,400 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 76.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 76,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

டாலரின் மதிப்பு கடந்த வாரம் 90.627 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது பெரியளவில் மாற்றமின்றி 90.003 டாலர்களாக காணப்படுகிறது. இதற்கிடையில் பத்திர லாபமானது சரிவடைந்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. எப்படியிருப்பினும் இந்த வாரத்தில் வெளியாக இருக்கும் நுகர்வோர் விலை குறியீட்டினை பொறுத்து தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today: gold prices down Rs.7000 per 10 gram from record high

Gold price today updates.. Gold price today: gold prices down Rs.7000 per 10 gram from record high
Story first published: Tuesday, June 8, 2021, 12:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X