சாமனியர்களுக்கு ஏமாற்றம் தந்த தங்கம் விலை.. தொடர் உச்சத்தில் தங்கம்.. இனி என்னவாகும்..!

சமீபத்திய நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது அமர்வாக பலமான ஏற்றத்தில் காணப்படுகிறது.

இதே இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது. அதே போல வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டு வருகின்றது.

இது உண்மையில் முதலீட்டாளர்களும், தங்க ஆர்வலர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இனி குறையுமா? இல்லை விலை அதிகரித்துக் கொண்டே தான் செல்லுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் தவித்து வருகின்றன. இதற்கிடையில் பாதுகாப்பினை காரணம் காட்டி, மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை முதலீட்டாளர்கள் குவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் இன்றளவிலும் தங்கம் ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவில் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்திருந்தாலும் பிசிகல் தங்கத்தின் தேவையானது, விலைக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சம் தொடும் கொரோனா

உச்சம் தொடும் கொரோனா

கொரோனா தாக்கமானது குறைய ஆரம்பித்திரந்தாலும், இன்றும் 3 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தினை தாண்டியுள்ளது. அதோடு கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார இழப்புகள், தொழில் துறை தேக்கம் சரிசெய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றும நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

பாதுகாப்பு புகலிடத்திற்கு ஆதரவு

அதோடு பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்திருக்கலாம். இது பணவீக்கத்திற்கு வழி வகுக்கலாம் என்றும் கூறுகின்றனர். இதனால் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

comex சந்தையில் தங்கம் விலை

comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 12.85 டாலர்கள் அதிகரித்து, 1850.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

comex சந்தையில் வெள்ளி விலை

comex சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னில் இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 1.41% அதிகரித்து, 27.750 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட மேலாக தொடங்கியுள்ளதோடு, உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை


இதே இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 47,976 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் உச்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு 840 ரூபாய் அதிகரித்து, 71,925 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 4,552 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து 36,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 34 ரூபாய் அதிகரித்து, 4,966 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 272 ரூபாய் அதிகரித்து 39,728 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே போல வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகின்றது, இன்று கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 76.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 76,600 ரூபாயாகவும் காணப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்காவின் பத்திர சந்தையானது சற்று சரிந்துள்ள நிலையில், டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது. அதோடு சர்வதேச நாடுகள் சிலவும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இதனால் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்களது முதலீடுகளை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க பத்திர விற்பனை தொடக்கம்

தங்க பத்திர விற்பனை தொடக்கம்

இந்தியாவில் இன்ற தங்க பத்திர விற்பனையானது இன்று தொடங்கியுள்ள நிலையில், இதுவும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள நிலையில் பிசிகல் வாங்க முடியாதவர்கள் தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய இது நல்ல வாய்ப்பாக அமையும்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். ஏனெனில் அதன் அனைத்து முக்கிய லெவல்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+