2 வார உச்சத்தில் தங்கம் விலை.. குறைந்த விலையை மிஸ் பண்ணிட்டோமோ.. இனி குறையுமா.. நிபுணர்கள் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில அமர்வுகளாக தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இன்று தங்கம் (gold) விலையானது இரண்டு வார உச்சத்தில் காணப்படுகிறது.

போகிற போக்கினை பார்த்தால் தங்கம் விலையானது நிபுணர்கள் கூறியதை போல, மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டு விடுமோ? இனி குறையுமா? குறையாதா?

போர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?!போர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?!

தங்கத்திற்கு சாதக, பாதகமான காரணிகள் என்னென்ன? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராம் தங்கம் விலையானது 8,500 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கத்தின் விலையானது இனி வரும் வாரங்களில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை இனி அதிகரிக்கலாம்

தேவை இனி அதிகரிக்கலாம்

நாட்டில் தற்போது லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நின்று போன்ற விழாக்கள், திருமண நிகழ்வுகள் இனி வரும் மாதங்களில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படியுள்ளது?

பல்வேறு சர்வதேச காராணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. குறிப்பாக தினசரி பேட்டர்ன், வார கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

கேண்டில் பேட்டர்ன்

கேண்டில் பேட்டர்ன்

குறிப்பாக இண்ட்ராடே வணிகத்தில் தினசரி கேண்டில், 4 மணி நேர கேண்டில், வார கேண்டில் என பலவும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்பது போலவே உள்ளன. சமீபத்திய கட்டுரையில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகின்றதோ? அப்போதெல்லாம் வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறியது நினைவுகூறத்தக்கது.

$1800 உடைத்த தங்கம்

$1800 உடைத்த தங்கம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி, ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகியது. இதனால் நிபுணர்கள் 1800 - 1745 டாலர் என்ற லெவலில் ஏதேனும் ஒன்றை உடைத்தாலும் சந்தை பெரியளவில் மாற்றம் காணலாம் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் தற்போது தங்கம் விலையாது 1800 டாலர்களையும் உடைத்து பச்சை சிக்னலை காட்டியுள்ளது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

தங்கம் விலையானது ஒரு வழியாக 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இது டாலர் மதிப்பு சற்று அழுத்தத்தில் உள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் பொருளாதாரம் வளர்ச்சி குறித்தான தரவுகள் சாதகமான உள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்த நிலையில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று அழுத்தம் கண்டுள்ள நிலையில், இன்று தங்கம் விலையானது உச்சம் தொட்டுள்ளது. எனினும் இதே நேரத்தில் சர்வதேச பங்கு சந்தைகளும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. ஏனெனில் பலவும் வரலாற்று உச்சத்தில் உள்ளன. ஆக இதுவும் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 21.15 டாலர்கள் (1.20%) அதிகரித்து, 1804.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சத்தினை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. மேலும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 1.12% அதிகரித்து, 26.797 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 365 ரூபாய் அதிகரித்து, 47,664 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. மேலும் மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 562 ரூபாய் அதிகரித்து, 70,601 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 17 ரூபாய் அதிகரித்து, 4,490 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 35,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 18 ரூபாய் அதிகரித்து, 4,898 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 39,184 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 10 பைசா குறைந்து, 74.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 74,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலை, இன்றும் பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது தொடர்ந்து 1790 டாலர்கள் என்ற லெவலுக்கு மேலாக வர்த்தகமாகும்போது, சற்று அதிகரிக்கலாம். இந்த நிலையில் அதன் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1805 - 1822 டாலர்களாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் - 1783 - 1775 டாலர்களாகும். இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 47,150 - 47000 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,400 - 47,700 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 69,600 - 68,300 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 70,700 - ,71,400 ரூபாயாகும்

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today; gold prices trades at 2 week high, is it a right time to buy gold?

Gold price today updates.. Gold price today; gold prices trades at 2 week high, is it a right time to buy gold?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X