5 நாளில் ரூ.1500 ஏற்றம்..சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியுமா.. நிபுணர்கள் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இன்று தங்கம் (gold) விலையானது இரண்டு வார உச்சத்திற்கு மேலாக காணப்படுகிறது.

போகிற போக்கினை பார்த்தால் தங்கம் விலையானது நிபுணர்கள் கூறியதை போல, மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்டு விடுமோ? இனி குறையுமா? குறையாதா? அடுத்து என்ன செய்யலாம்? இப்போது வாங்கலாமா? வேண்டாமா? அடுத்ததாக ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதா?

தலைநகரில் 100, தமிழ்நாட்டில் 101.. மக்கள் தான் பாவம்..!தலைநகரில் 100, தமிழ்நாட்டில் 101.. மக்கள் தான் பாவம்..!

தங்கத்திற்கு சாதக, பாதகமான காரணிகள் என்னென்ன? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? வாருங்கள் பார்க்கலாம்.

எகிறிய தங்கம் விலை

எகிறிய தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த 5 அமர்வுகளில் மட்டும் 1,500 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராம் தங்கம் விலையானது 8,300 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலையானது சர்வதே சந்தையில் அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாக நின்று வர்த்தமாகினால், தொடர்ந்து ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும் 1780 டாலர்களை உடைத்துக் காட்டினால் சற்று குறையலாம் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது 1800 டாலர்களுக்கும் மேலாக தங்கம் விலையானது இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு இப்படியே இருக்கும் பட்சத்தில் இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

அமெரிக்க பத்திர லாபம்

அமெரிக்க பத்திர லாபம்

அமெரிக்காவில் பத்திர லாபமானது 4 மாதத்தில் இல்லாத அளவில் குறைந்துள்ள நிலையில், இது தங்கத்திற்கு சாதகமான விஷயமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வட்டி விகிதமும் குறைவாக உள்ள நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பானது முந்தைய அமர்வில் 0.4% ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று சற்று அழுத்தம் கண்டு 92.528 டாலராகவும் காணப்படுகிறது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் ஆசிய சந்தைகளும் இன்று சற்று சரிவில் காணப்படும் நிலையில், இது பங்குகளில் முதலீடுகளை குறைத்து, தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

தேவை இனி அதிகரிக்கலாம்

தேவை இனி அதிகரிக்கலாம்

பிசிகல் தங்கத்தினை அதிகம் பயன்படுத்தும் இந்தியா சீனா போன்ற நாடுகளில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் நகை ஏற்றுமதியினை ஊக்குவிக்கவும், நகை வியாபாரிகளுக்கு சலுகை அளிக்கும் வகையிலும் அடிப்படை இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆக இது இனி வரும் மாதங்களில் தங்கத்தின் தேவையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேண்டில் பேட்டர்ன் கணிப்பு

கேண்டில் பேட்டர்ன் கணிப்பு

குறிப்பாக இண்ட்ராடே வணிகத்தில் தினசரி கேண்டில், 4 மணி நேர கேண்டில், வார கேண்டில் என பலவும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்பது போலவே உள்ளன. மேலும் நிபுணர்களும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகின்றதோ? அப்போதெல்லாம் வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருவது நினைவு கூறத்தக்கது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு?

தங்கம் விலையானது மீண்டும் மீண்டும் 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. இது டாலர் மதிப்பு சற்று அழுத்தத்தில் உள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. 1800 டாலர்களுக்கு மேலாக தொடர்ந்து வர்த்தகமாகும் இந்த நிலையில், தங்கம் விலையானது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்ற கணிப்பே நிலவி வருகின்றது.

Comex Gold விலை நிலவரம்

Comex Gold விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 6.65 டாலர்கள் அதிகரித்து, 1800.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்கவும் சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

Comex Silver விலை நிலவரம்

Comex Silver விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. மேலும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 0.97% அதிகரித்து, 26.427 டாலர்களாக காணப்படுகிறது.

MCX Gold விலை நிலவரம்

MCX Gold விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 129 ரூபாய் அதிகரித்து, 47,813 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX Silver விலை நிலவரம்

MCX Silver விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 482 ரூபாய் அதிகரித்து, 69,994 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 5 ரூபாய் குறைந்து, 4,515 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 36,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 6 ரூபாய் குறைந்து, 4,925 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து, 39,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 1.10 பைசா குறைந்து, 74.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1100 ரூபாய் குறைந்து, 74,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் வெள்ளி விலை, இன்றும் சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது தொடர்ந்து 1800 டாலர்கள் என்ற லெவலுக்கு மேலாக வர்த்தகமாகும்போது, சற்று அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதன் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 1804 - 1820 டாலர்களாகும். இதே முக்கிய சப்போர்ட் லெவல் - 1784 - 1772 டாலர்களாகும்.

இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 47,550 - 47,400 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,880 - 48,000 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 69,100 - 68,700 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 70,100 - ,70,700 ரூபாயாகும்

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம். நீண்டகால நோக்கிலும் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today; gold prices up Rs.1,500 in just 5 days, what experts suggest

Gold price today updates.. Gold price today; gold prices up Rs.1,500 in just 5 days, what experts suggest
Story first published: Wednesday, July 7, 2021, 12:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X