தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று காலை தொடக்கத்தில் மூன்று மாத உச்ச லெவலை எட்டியது. எனினும் இன்றைய உச்ச விலையும் இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாகும். இந்த லெவலை உடைக்கவில்லை என்பது தான் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இன்றைய உச்ச விலையும், தொடக்க விலையையும் உடைக்கவில்லை. இது 1774.15 டாலர்களாகும். ஆக இந்த லெவலை உடைத்தால் மட்டுமே மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக தங்கம் விலையானது அதனை உடைத்தால் மட்டுமே மீண்டும் பெரியளவில் உச்சம் தொடலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
தற்போதைய நிலவரம் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது உச்சத்தினை எட்டியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்தால் மிக வேகமாக உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அமர்வின் உச்ச விலை 1775.60 டாலர்களாகும்.
பணவீக்கம் முழுமையாக குறையவில்லை
தங்கம் விலையானது டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது உச்சத்தில் உள்ள நிலையில், தங்கம் விலையானது மூன்று மாத உச்சத்தினை கடந்த அமர்வில் தொட்டது. பணவீக்கம் என்பது கடந்த அக்டோபர் மாதத்தில் குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் முழுமையாக குறையவில்லை. ஆக வட்டி அதிகரிப்பு என்பது இத்தோடு முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்
அமெரிக்காவின் பணவீக்க விகிதம் மீண்டும் தங்கம் விலையை ஊக்குவித்து வரும் நிலையில், வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் தங்கத்தினை குறைந்த விலையில் கிடைத்தால் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
பணவீக்கம் எதிர்பார்ப்பு
நவம்பர் மாதத்திலும் பணவீக்க விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றாலும், சற்று மெதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அடுத்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய விகிதங்களை விட சற்றே குறைவாக அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 8.30 டாலர்கள் குறைந்து, 1761.10 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் இன்றைய தொடக்க விலையும் உச்ச விலையும் ஒன்றாகவே உள்ளது. ஆக அதனை உடைக்கும் பட்சத்தில் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றாலும், அதுவரையில் தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போலவே குறைந்தே காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்றைய தொடக்க விலையும் மேலாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.26% குறைந்து, 21.387 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 197 ரூபாய் அதிகரித்து, 52,510 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. இதனால் மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு, 28 ரூபாய் குறைந்து, 61,551 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதனால் மீடியம் டெர்மில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 4901 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 39,208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 5347 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 42,776 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 53,470 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 67.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 677 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 67,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.49,010
மும்பை - ரூ.48,260
டெல்லி - ரூ.48,360
பெங்களூர் - ரூ.48,290
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.49,010


Click it and Unblock the Notifications