மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை.. இது தான் நல்ல சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்தை கண்டு வந்தாலும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சற்று சரிவிலேயே காணப்பட்டது.

குறிப்பாக இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும்போது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை கண்டிருந்தாலும், தங்கம் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிவிலேயே காணப்பட்டது. ஆக இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகின்றது.

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கின்றது?

டெக்னிக்கல் பேட்டர்ன் என்ன சொல்கின்றது?

தங்கம் விலையானது டெக்னிக்கலாக தினசரி கேண்டில், வார கேண்டில், 5 மணி நேர கேண்டில் என அனைத்திலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

திவால் நிலையில் சீனாவின் மிகப்பெரிய நிறுவனம்

திவால் நிலையில் சீனாவின் மிகப்பெரிய நிறுவனம்

சீனாவின் மிகப் பிரபலமான எவர்கிராண்டே நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திவால் நிலைக்கு தள்ளப்பட்டது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம் தற்போது ஏற்ற பாதைக்கு திரும்பி இருந்தாலும், கொரோனா காலத்தில் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதற்கு இதுவே சாட்சியாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தற்போது தங்கத்தின் விலையானது 1758 டாலர் என்ற அளவில் காணப்படுகிறது. இது கடந்த வாரத்தில் 1740 டாலர்களை உடைத்தால், இன்னும் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தில் இந்த லெவலை உடைத்துக் காட்டியிலிருந்தாலும், முடிவு விலையானது 1740 டாலர்களுக்கு மேலாகவே இருந்தது. ஆக இதுவும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் கிட்டத்தட்ட ஆறு மாத சரிவில் காணப்படுவதே, வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இது தங்கத்தின் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆறு மாத சரிவில் தங்கம் விலை உள்ள நிலையில், முதலீட்டு ரீதியாகவும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

மேலும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் முதற்கொண்டே பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுத்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 7.25 டாலர்கள் அதிகரித்து, 1758.85 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. மேலும் முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக இது வாங்க சரியான நேரம் எனலாம்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலமான ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், இன்றும் சற்று ஏற்றத்தினையே கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1.08% ஏற்றம் கண்டு, 22.668 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 91 ரூபாய் அதிகரித்து, 46,086 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 45,992 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,036 ரூபாயாகவும் தொடங்கியது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ள நிலையில், இது வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 472 ரூபாய் அதிகரித்து, 60,427 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 59,955 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 60,626 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது நடப்பு வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாகவே குறைந்திருந்த நிலையில், இது நகை ஆர்வலர்களுக்கு வாங்க சரியான நேரம் எனலாம். இன்று கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 4,369 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 34,952 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இன்று கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4,766 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 38,128 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, 64.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 647 ரூபாயாகவும், கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து, 64,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்களும் ஸ்டாப்லாஸ் வைத்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டிகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+