Gold price updates: அமெரிக்க டாலரின் மதிப்பினால் இன்று மீண்டும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.இதற்கிடையில் இந்திய சந்தையிலும் இதன் எதிரொலி காணப்படுகின்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதத்தின் மத்தியில், இது தேவையினை பாதிக்கலாம். எப்படியிருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான அமெரிக்காவின் வேலை தரவானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்கா பத்திர சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
தாக்கம் இருக்கலாம்
எப்படியிருப்பினும் வரவிருக்கும் அமெரிக்காவின் மத்திய பங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு என்பது 50 அடிப்படை புள்ளிகள் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், அமெரிக்காவில் வரவிருக்கும் மற்ற பொருளாதார தரவுகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் பற்பல குழப்பமான நிலை இருந்து வந்தாலும், இந்தியா, சீனாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவை என்பது உச்சத்தில் காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.09% அதிகரித்து, 1887.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு கிட்டதட்ட 2% அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 1.73% அதிகரித்து, 20.852 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதுவும் மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 460 ரூபாய் அதிகரித்து, 56,610 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 732 ரூபாய் அதிகரித்து, 63,637 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகாவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 5325 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து, 42,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 59 ரூபாய் அதிகரித்து, 5809 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 590 ரூபாய் அதிகரித்து, 58,090 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 69.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 69,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications