தங்கம் விலையானது கடந்த அமர்வில் பெரும் சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதே மற்றொரு விலை உயர்ந்த ஆபரணமான வெள்ளியின் விலையானது தொடர்ந்து, நான்காவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் தங்கம் விலையானது அதிகரித்து வரும் இந்த நேரத்தில், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகின்றது. என்ன காரணம்? இப்போது தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? என்பது பெரும் கேள்வியாகவே எழுந்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
அமெரிக்க பத்திரத்தின் லாபமானது குறைந்து வரும் நிலையில், இது தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் முதலீட்டு தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் இந்த வாரத்தில் இதுவரையில் தங்கம் விலையானது 1% அதிகமாக அதிகரித்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் புராபிட் புக்கிங் செய்தாலும் கூட, மீண்டும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய சந்தையில் தங்கம் நிலவரம்
வேலையில்லாதோர் நலன் குறித்த குறியீடுகள் கடந்த வாரத்தில் சற்று அதிகரித்த நிலையில், அது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தையில் தங்கம் விலையானது இன்று காலையில் தடுமாற்றத்தில் காணப்பட்டது.
ஆசிய சந்தையில் தங்கம் நிலவரம்
வேலையில்லாதோர் நலன் குறித்த குறியீடுகள் கடந்த வாரத்தில் சற்று அதிகரித்த நிலையில், அது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று ஆசிய சந்தையில் தங்கம் விலையானது இன்று காலையில் தடுமாற்றத்தில் காணப்பட்டது.
இந்திய சந்தை நிலவரம்
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இன்று காலை அமர்வில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்பட்டது. இதற்கிடையில் சப்போர்ட் லெவலாக 47,451 - 47,182 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 48,140 ரூபாயாகவும், 48,560 ரூபாயாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - ரூ.68,507 - 68,051, ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.69,557 - 70,151 ரூபாயாகவும் ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட் கணித்துள்ளார்.
நிபுணர்களின் கணிப்பு
ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்பதற்காக அறிகுறியை காட்டியுள்ளது. எனினும் பணவீக்கம் பற்றிய கவலை, அதிக வேலையின்மை விகிதம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகவும், ரிசர்வ் வங்கிக்கு கவலையளிக்கும் விஷயங்களாகவும் உள்ளன.
அடுத்து என்ன செய்யலாம்
எனினும் அதிகரித்து வரும் உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்கம் என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியினை பாதிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!



Click it and Unblock the Notifications