இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கத்தை மக்கள் வெறும் நகையாகவும், லைப்ஸ்டைல் பொருட்களாகவும் பார்ப்பதை விட தங்கத்தை முதலீடாகவும், அவசர நிதி திரட்டும் கருவியாகவும், கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக வைக்கப்படும் டெபாசிட் தொகையாக கருதுகின்றனர்.
ஆனால் சமீபத்தில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தாண்டியது மட்டும் அல்லாமல் தொடர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 60000 ரூபாய்க்கு மேலாகவே இருக்கும் காரணத்தால் சாமானியர்கள் தங்கத்தை வாங்கும் அளவீடும், எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இன்று காலை சர்வதேச வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2000 டாலாரை தாண்டி 2010 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்படுகிறது.

இது மட்டும் அள்லாமல் நேற்றை வர்த்தகத்தில் 1993.40 டாலர் என்ற குறைவான விலையில் நிலவரத்தில் இருந்து இன்று 2010 டாலர் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் இன்று தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணியாக டாலர் மதிப்பு இருக்க போகிறது, தற்போது டாலர் மதிப்பு 0.54 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வருகிற 22 ஆம் தேதி அக்ஷய திருதியை பண்டிகை வரும் நிலையில் இந்தியா முழுவதும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகவே இருக்கும், அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தங்கம் விற்பனை சூடுப்பிடிக்க உள்ளது. தங்கம் விலை 60000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தாலும் இப்பண்டிகை காரணமாக குறைந்தது 1, 2 கிராம் தங்கமாவது வாங்கப்படும்.

ஆனால் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் ரீடைல் விற்பனை சந்தையில் இந்த வருடம் தங்கம் விற்பனை குறைவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய மக்களை எப்போதும் தங்கம் சார்ந்த விஷயத்தில் கணிக்க முடியாது. தங்கத்தை வாங்க இப்போது பல வழிகள் இருக்கும் காரணத்தால் எப்படியாவது அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும்.
எம்சிஎஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.26 சதவீதம் சரிந்து 60,174 ரூபாயாக உள்ளது. நேற்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
MCX சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் உயர்ந்து 60,268 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1 கிலோ 0.06 சதவீதம் உயர்ந்து 74,860 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தையில் கணிக்கப்பட்டதை போலவே 2001 டாலர் வரையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை : இன்றைய ரீடைல் சந்தை வர்த்தக விலை நிலவரம் சென்னை - 56,450 ரூபாய், மும்பை - 55,850 ரூபாய், ல்லி - 56,000 ரூபாய், கொல்கத்தா - 55,850 ரூபாய், பெங்களூர் - 55,900 ரூபாய், ஹைதெராபாத் - 55,850 ரூபாய், கேரளா - 55,850 ரூபாய், புனே - 55,850 ரூபாய், பரோடா - 55,900 ரூபாய், அகமதாபாத் - 55,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 56,000 ரூபாய், லக்னோ - 56,000 ரூபாய், கோயம்புத்தூர் - 56,450 ரூபாய், மதுரை - 56,450 ரூபாய்.
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை : இன்றைய ரீடைல் சந்தை வர்த்தக விலை நிலவரம் சென்னை - 61,600 ரூபாய், மும்பை - 60,920 ரூபாய், டெல்லி - 61,070 ரூபாய், கொல்கத்தா - 60,920 ரூபாய், பெங்களூர் - 60,970 ரூபாய், ஹைதெராபாத் - 60,920 ரூபாய், கேரளா - 60,920 ரூபாய், புனே - 60,920 ரூபாய், பரோடா - 60,970 ரூபாய், அகமதாபாத் - 60,970 ரூபாய், ஜெய்ப்பூர் - 61,070 ரூபாய், லக்னோ - 61,070 ரூபாய், கோயம்புத்தூர் - 61,600 ரூபாய், மதுரை - 61,600 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இன்றைய ரீடைல் சந்தை வர்த்தக விலை நிலவரம் சென்னை - 80500.00 ரூபாய், மும்பை - 77400.00 ரூபாய், டெல்லி - 77400.00 ரூபாய், கொல்கத்தா - 77400.00 ரூபாய், பெங்களூர் - 80500.00 ரூபாய், ஹைதெராபாத் - 80500.00 ரூபாய், கேரளா - 80500.00 ரூபாய், புனே - 77400.00 ரூபாய், பரோடா - 77400.00 ரூபாய், அகமதாபாத் - 77400.00 ரூபாய், ஜெய்ப்பூர் - 77400.00 ரூபாய், லக்னோ - 77400.00 ரூபாய், கோயம்புத்தூர் - 80500.00 ரூபாய், மதுரை - 80500.00 ரூபாய்.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications