இன்று தங்கம் விலை குறைந்திருக்கு.. இன்னும் குறையுமாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், சற்று சரிவில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் இதுவரையில் பெரியளவில் ஏற்றமோ அல்லது சரிவினையோ காணவில்லை. சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

இன்று திங்கட்கிழமை என்பதால் முக்கிய டேட்டாக்கள் எதுவும் இல்லை. ஆக சந்தையில் பெரியளவில் மாற்றம் இல்லை எனலாம்.

 தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன..? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்..! தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன..? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்..!

எப்படியிருப்பினும் இனி விலை எப்படி இருக்கும்? இனி அதிகரிக்குமா? குறையுமா? முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாங்கலாலா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்னென்ன? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இது குறையுமா? வாருங்கள் பார்க்கலாம்.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, 9 1/2 மாதத்தில் இல்லாத அளவுக்கு 93.33 டாலர்களை தொட்டு வலுவடைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது தங்கம் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், மீடியம் டெர்மில் சற்று குறைவது போலவே காணப்படுகின்றது.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

இது தங்க வர்த்தகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,000 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை பலத்த சரிவு

தங்கம் விலை பலத்த சரிவு

தங்கம் விலையானது இந்திய சந்தையில் நான்கு மாத குறைந்த விலையான 45,600 தொட்ட பிறகு, பெரியளவில் ஏற்றம் காணாமல் தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது. இதே சர்வதேச சந்தையிலும் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.

தங்கம் Vs பத்திர சந்தை

தங்கம் Vs பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையும் தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இது தங்கத்திற்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது இன்னும் அழுத்தத்தினை காணலாம் என்றே பார்க்கப்படுகிறது.

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

அமெரிக்க பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல நாடுகளின் பங்கு சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் இருந்து வெளியேறி வருகின்றது. இதனால் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று குறையும் விதமாகவே அழுத்தத்தில் காணப்படுகின்றன.

உருமாறிய கொரோனா பரவல் குறித்த அச்சம்

உருமாறிய கொரோனா பரவல் குறித்த அச்சம்

பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளை முதலீட்டாளர்கள் கவனமுடன் கவனித்து வருகின்றனர். எனினும் அப்படி வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனம் செலுத்துங்கள்

கவனம் செலுத்துங்கள்

நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில், தங்கம் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 3 டாலர்கள் அதிகரித்து, 1786.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த மற்றும் அதிக பட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

 

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாறும் விதத்திலேயே காணப்படுகின்றது. இது 1798 டாலர்களை உடைத்தால் மீண்டும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். எனினும் வார கேண்டில் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், இன்று அதிகரிக்காவிட்டாலும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.55% சற்று அதிகரித்து, 23.238 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் முந்தைய அமர்வினை விட சற்று மேலாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 48 ரூபாய் சற்று அதிகரித்து, 47,206 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 374 ரூபாய் சற்று அதிகரித்து, 62,095 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று வர்த்தகம் செய்யலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 3 ரூபாய் குறைந்து, 4,461 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 35,688 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 4 ரூபாய் குறைந்து, 4,866 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 38,928 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே 10 கிராமுக்கு 48,660 ரூபாயாகவும் காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 0.04 பைசா குறைந்து, 66.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 66,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே பேப்பர் தங்கத்தினையும் நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on august 23rd, 2021; gold prices struggling after down Rs.9000 from last year high, it may fall further today

Gold price today on august 23rd, 2021; gold prices struggling after down Rs.9000 from last year high, it may fall further today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X