உச்சம் தொட்ட தங்கம் விலை.. நகை வாங்குறது கஷ்டம் தான்.. இனி குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

 

தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே 1780 - 1815 டாலர்களுக்கு இடையில் வர்த்தகமாகி வருகின்றது. பெரியளவில் இதில் ஏதேனும் ஒரு பக்கத்தினை உடைத்தால், அந்த பக்கத்தில் தங்கம் விலையானது செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காபூலில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சந்தையில் அது தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு சாதகமாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நாள்.. லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 56,000 கீழாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்..!

விலை குறையுமா?

விலை குறையுமா?

எப்படியிருப்பினும் இனி விலை எப்படி இருக்கும்? இனி அதிகரிக்குமா? குறையுமா? முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கருத்து என்ன? வாங்கலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்னென்ன? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இது குறையுமா? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? மற்ற முக்கியமான லெவல்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பு, வலுவான நிலையில் இருந்து வருகின்றது. இதோடு அமெரிக்காவின் பத்திர சந்தையில் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. எனினும் இன்று நடக்கவிருக்கும் ஜாக்சான் ஹோல் கூட்டத்தில் உரையாடவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

முக்கிய லெவல் உடைப்பு
 

முக்கிய லெவல் உடைப்பு

தங்கத்தின் முக்கிய லெவலாக 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில், தற்போது 1804 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவே தங்கம் விலை ஏற்றம் காணலாம் என்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இன்று நடக்கவிருக்கும் கூட்டம், அதிகரித்து வரும் உருமாறிய கொரோனா என்பது தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

ரூ.8,700க்கு மேல் சரிவு

ரூ.8,700க்கு மேல் சரிவு

தங்கம் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,700 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு பல்வேறு காரணிகளும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், இது சந்தையில் இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

உச்சம் தொடும் பங்கு சந்தைகள்

அமெரிக்க பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல நாடுகளின் பங்கு சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் கவனம் செலுத்த காரணமாக அமைந்துள்ளது. இதனால் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.

உருமாறிய கொரோனா பரவல் குறித்த அச்சம்

உருமாறிய கொரோனா பரவல் குறித்த அச்சம்

அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.

ஆப்கானிஸ்தான் - தாலிபான்கள் பிரச்சனை

ஆப்கானிஸ்தான் - தாலிபான்கள் பிரச்சனை

தற்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஆப்கானிஸ்தான் மீது தான் திரும்பியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே தாலிபான்களால் மிகுந்த அசாதாரண சூழலில் இருந்து வரும் ஆப்கானிஸ்தான் மக்கள், தற்போது தொடர் குண்டு வெடிப்புகளால் அச்சத்தில் உள்ளனர். தற்போது வரையில் அங்கு 5 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முக்கிய எதிர்பார்ப்பு

முக்கிய எதிர்பார்ப்பு

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அது தற்போதைக்கு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முக்கிய ஊக்கத் தொகை அறிவிப்புகள் வருமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

கவனம் செலுத்துங்கள்

கவனம் செலுத்துங்கள்

நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில், தங்கம் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 10.15 டாலர்கள் அதிகரித்து, 1805.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய அதிக பட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில், மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. இது 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில் 1814 டாலர்களை உடைத்தால், இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம். இண்டிராடே, தினசரி கேண்டில், வார கேண்டில் என அனைத்தும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளன.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.81% அதிகரித்து, 23.740 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட இன்று சற்று மேலாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 275 ரூபாய் அதிகரித்து, 47,515 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 458 ரூபாய் அதிகரித்து, 63,175 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்து வர்த்தகம் செய்யலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டுள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 28 ரூபாய் அதிகரித்து, 4,484 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 35,872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 31 ரூபாய் அதிகரித்து, 4,892 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 39,136 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே 10 கிராமுக்கு 48,920 ரூபாயாகவும் காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 0.10 பைசா குறைந்து, 67.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 67,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலை சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே டிஜிட்டல் தங்கத்தினையும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on august 27th, 2021; gold prices breaks $1800 in Comex market

Gold price today on august 27th, 2021; gold prices breaks $1800 in Comex market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X