தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று சர்வதேச சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கும், தங்க வர்த்தகர்களுக்கும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தங்கம் விலை குறையும் போது குறைந்த விலையில் வாங்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையானது கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட நிலையில், மீண்டும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும். பழைய உச்சத்தினை உடைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆக குறைந்த விலையானது வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
முக்கிய சப்போர்ட் விகிதம்
தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்பட்டாலும், தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 1800 டாலர்களுக்கு மேலேயே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்புகின்றனர். ஆக தங்கம் விலையானது குறையும்போது வாங்கி வைக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாட்களாகவே தங்கம் விலையானது குறைந்து வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 3.95 டாலர்கள் குறைந்து, 1813.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக இன்று தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.15% குறைந்து, 25.508 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் ஆகஸ்ட் மாத கான்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், அக்டோபர் கான்டிராக்டில் தற்போது 10 கிராம் தங்கம் விலையானது கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 47,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 114 ரூபாய் அதிகரித்து, 67,961 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 4,547 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,376 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4,961 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,688 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி காணப்படுகிறது. கிராமுக்கு 73 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 73,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
மீடியம் டெர்மில் தங்கம் விலை சரியலாம்
மீடியம் டெர்மில் தங்கம் மற்றும் வெள்ளின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில வாங்க நினைப்பவர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் சற்று பொறுத்திருந்தால் குறைந்த விலையில் வாங்க வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆக இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கலாம்.
டாலரின் மதிப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்துள்ள நிலையில், அது தங்கத்தின் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையும் சற்று சரிவில் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் இந்தியாவினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது உச்சத்தில் உள்ள நிலையில், தங்கத்தின் தேவையினை பாதித்துள்ளது.
அடுத்த சப்போர்ட் லெவல்
தங்கம் விலையின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலானது 1835 டாலர்களாகும். இதனை உடைத்துக் காட்டினால் இன்னும் சற்று ஏற்றம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1790 டாலர்களாகவும் உள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்
இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது குறித்து பலவிதமாக கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவும் தங்கம் விலையில் நீண்டகால நோக்கில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது.
இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications