வாவ்... தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் விலை சரிவு.. நிபுணர்கள் சொன்ன செம கணிப்ப பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. நேற்று காலை அமர்வில் சற்று குறைந்த நிலையில், மாலையில் சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இது தங்க வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 

இது பெரியளவில் சரிவினைக் காணவிட்டாலும், தொடர்ந்து சரிவில் காணப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த சரிவு இப்படியே தொடருமா? இனியும் குறையுமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

இது உண்மையில் சர்பிரைஸ் தான்.. இரண்டாவது நாளாக சரியும் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு..!

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவாக காணப்படும் நிலையில், இது தங்கத்தினை விலையில் சரிவினை காண முக்கிய காரணியாக அமைந்துள்ளது. எனினும் இந்த சரிவு தொடருமா? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.

பெரியளவில் மாற்றமில்லை

பெரியளவில் மாற்றமில்லை

தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், பெரியளவில் குறையவில்லை எனலாம். அதோடு தங்கத்தின் முக்கிய லெவலான 1800 டாலர்களுக்கு மேலேயே காணப்படுகிறது. இந்த விலையை உடைத்து இன்னும் கீழாக தொடருமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

உச்சத்தில் இருந்து தங்கம் விலை வீழ்ச்சி
 

உச்சத்தில் இருந்து தங்கம் விலை வீழ்ச்சி

இன்று தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 8,350 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய சந்தையினை பொறுத்த வரையில் நடப்பு ஆகஸ்ட் கான்ட்ராக்ட், ஆகஸ்ட் 5 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அக்டோபர் கான்ட்ராக்டில் வாங்கலாம்.

கொரோனா பரவல் குறித்த அச்சம்

கொரோனா பரவல் குறித்த அச்சம்

உலகின் பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மீண்டும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது சந்தையில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதுவும் பாதுகாப்பு புகலிடமாக தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஆக டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தும் போது, அது தங்கத்திற்கு சாதகமாகவும் அமையும்.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த சில தினங்களாகவே அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் காணப்பட்டதையடுத்து, ஆசிய சந்தைகளும் சரிவில் காணப்பட்டன. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இது தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் காண வாய்ப்பாக அமைந்தது. எனினும் இன்று பங்கு சந்தைகள் ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது.

வேலையின்மை டேட்டா

வேலையின்மை டேட்டா

அமெரிக்காவில் நடப்பு வாரத்தில் வேலையின்மை குறித்தான தரவு வெளியாகவிருக்கும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் வட்டி விகிதம் என்பது மாறமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

சர்வதேச அளவில் ஏற்படும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம், அமெரிக்க பத்திர லாபம், உருமாறிய கொரோனா பரவல், லாக்டவுன் கட்டுப்பாடுகள், வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய காரணிகளும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் செம கணிப்பு

நிபுணர்களின் செம கணிப்பு

தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2075.47 டாலர்களை தொட்டது. இது அடுத்த 3 - 5 வருடங்களில் அவுன்ஸூக்கு 3000 - 5000 டாலர்கள் வரையில் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமில்லாமல் 1800 டாலர்களுக்கு அருகிலேயே காணப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 7.40 டாலர்கள் குறைந்து, 1814.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சரிவில் தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மிலும் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.93% குறைந்து, 25.337 டாலர்களாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது, தற்போது 10 கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து, 47,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம். அதுவும் அக்டோபர் காண்டிராக்டில் வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 430 ரூபாய் குறைந்து, 67,459 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 3 ரூபாய் குறைந்து, 4,533 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 36,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 5 ரூபாய் குறைந்து, 4,945 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 39,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, 72.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 72,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. வெள்ளியின் விலையும் குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் என்பது நீண்டகால நோக்கில் தேவையானது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on august 3rd, 2021, gold prices may double in 3- 5 years

Gold price latest updates.. Gold and silver prices fall today in MCX and COMEX market, jewellery gold also fall in Chennai today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X