சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா.. அடுத்த முக்கிய சப்போர்ட் ரூ.47,700..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது காலை அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்டு, பின்னர் மாலை அமர்வில் பலமான சரிவினையும் கண்டுள்ளது. இன்று காலை தொடக்கத்திலும் சற்று சரிவில் காணப்படுகிறது.

இதற்கிடையில் இன்றும் பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

 பேமெண்ட் துறையில் இறங்கும் சோமேட்டோ.. இது புது டிவிஸ்ட்..! பேமெண்ட் துறையில் இறங்கும் சோமேட்டோ.. இது புது டிவிஸ்ட்..!

எனினும் இந்த சரிவானது தொடருமா? இன்னும் எவ்வளவு குறையும்? இன்றைய விலை நிலவரம் என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

உச்சத்தில் இருந்து சரிவு தான்

உச்சத்தில் இருந்து சரிவு தான்

தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,300 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் கானப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சரிவு தொடருமா? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன என வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.85 டாலர்கள் குறைந்து, 1811.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையினை உடைக்கவில்லை எனலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்து தான் காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.23% குறைந்து, 25.405 டாலர்களாக காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 72 ரூபாய் குறைந்து, 47,820 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகத் தான் காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 125 ரூபாய் குறைந்து, 67,485 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைப்பது போலவே காணப்படுகிறது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்பது போலவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 7 ரூபாய் குறைந்து, 4,526 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 36,208 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 7 ரூபாய் குறைந்து, 4,938 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,504 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 80 பைசா குறைந்து, 72.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 72,300 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 47,700 ரூபாயாக உள்ளது. எனினும் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக சப்போர்ட் லெவலாக 48,100 ரூபாயாகவும் உள்ளது.
தங்கம் சப்போர்ட் - ரூ.47,652, 47,413, 46,821
தங்கம் ரெசிஸ்டன்ஸ் - ரூ.48,244, 48,597, 49,189
வெள்ளியின் சப்போர்ட் - ரூ.67,005, 66,409, 64,880
வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் - ரூ.68.534, 69,467,70,996

 

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தையானது சற்று அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ளது. மேற்கொண்டு இது தங்கம் வர்த்தகர்களுக்கு சாதகமான அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், இது பொருளாதாரம் மேம்பட்டு வருவதற்கான சிறந்த காரணியாகவே பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. எனினும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், இது அதிக சரிவினை தடுக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

வெள்ளி தேவை சரிவு

வெள்ளி தேவை சரிவு

தொழிற்துறையில் வெள்ளியின் தேவையானது சரிவினைக் கண்டு வருவதாக, சில தினங்களுக்கு முன்பு வெளியான தரவுகள் கூறியது. இது தொழிற்துறையில் இன்னும் முழுமையான ஏற்றம் காணவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இதனால் வெள்ளியின் தேவையானது குறைவாகவே உள்ளது எனலாம்.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

எனினும் தங்கத்தின் தேவையானது முதலீட்டு நோக்கில் பார்க்கும்போது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. இதே போல ஆபரணத் தங்கத்திற்கான தேவையானது தற்போது ஆடி மாதம் என்பதால் இங்கு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் ஆவணி மாதத்தில் முகூர்த்த தினங்கள் அதிகம் என்பதால் அப்போது விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

உருமாறிய கொரோனா பரவல் அச்சம்

உருமாறிய கொரோனா பரவல் அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தற்போது தான் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது. எனினும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது. இது பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.

தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்

தங்கம் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என தொடர்ந்து நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். மொத்தத்தில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on august 5th, 2021, gold experts say crucial support Rs.47.700

Gold price today August 5th, 2021; gold and silver prices down today in MCX and Comex market, experts said that it is the right time to buy gold
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X