தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றது.
இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம்.
ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,000 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இது குறைந்த விலையில் வாங்கி வைக்க நல்ல இடமாகவும் பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் சந்தேகம்
எனினும் இந்த சரிவு இன்னும் இப்படியே தொடருமா? இனி விலை அதிகரிக்குமா? என்ற பல சந்தேகங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக தங்கம் விலை எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
தங்கம் விலை பலத்த சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் சரியும் விதமாகவே காணப்படுகிறது.
டாலர் Vs தங்கம்
தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதனால் பங்கு சந்தைகளும் தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளன. ஆக இதுவும் தங்கம் விலை சரிய முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
தங்கம் Vs பத்திர சந்தை
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து கீழாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதுவும் தங்கத்தில் முதலீடுகள் குறைய காரணமாக அமைந்துள்ளது. இது தங்கத்திற்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது சரிந்துள்ள நிலையில், இன்னும் இது தங்கம் விலை குறைய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சத்தில் இருந்து பலத்த வீழ்ச்சி
இன்று தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொட்ட வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
உருமாறிய கொரோனா பரவல்
பல சர்வதேச நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மீண்டும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுமா? என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக அமையலாம்.
வரலாற்று உச்சம் தொடும் பங்கு சந்தைகள்
அமெரிக்க பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல நாடுகளின் பங்கு சந்தைகள் தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை தொட்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. சொல்லப்போனால் இருக்கும் முதலீடுகளும் வெளியேறி வருகின்றன.
முக்கிய எதிர்பார்ப்பு
பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கத்திற்கு எதிராகவும் சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் தங்கம் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் செலுத்துங்கள்
நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம், பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பலத்த சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 17.60 டாலர்கள் குறைந்து, 1745.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் குறைந்த பட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
அதிலும் தங்கம் விலை அவுன்ஸூக்கு 1677.90 டாலர்கள் வரையில் சென்று திரும்பியுள்ளது. இது தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். அதோடு வாரம், மாத கேண்டில் என அனைத்தும் தங்கம் விலை சரியலாம் என்பது போலவே காணப்படுகிறது. ஆக சற்று கவனமுடன் வர்த்தகம் செய்யலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் பலத்த சரிவில் தான் காணப்படுகிறது. எனினும் இது மீடியம் டெர்மில் இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 1.51% குறைந்து, 23.962 டாலர்களாக காணப்படுகிறது. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து, 46,240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் பலத்த சரிவினையே கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 1143 ரூபாய் குறைந்து, 63,853 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்பது போல காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 59 ரூபாய் குறைந்து, 4,380 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து, 35,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 65 ரூபாய் குறைந்து, 4,778 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து, 38,224 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே 10 கிராமுக்கு 47,780 ரூபாயாகவும் காணப்படுகிறது.
ஆபரண வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், ஆபரண வெள்ளி விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 1.50 பைசா குறைந்து, 68.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,500 ரூபாய் குறைந்து, 68,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்த வரையில், தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால் நீண்டகால நோக்கில் வாங்கலாம். இதுவே பேப்பர் தங்கத்தினையும் நீண்டகால நோக்கிலும் வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் விலை குறையுபோது வாங்கினால் லாபம் இன்னும் அதிகரிக்கும்.
More From GoodReturns

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications