தங்கம் விலை 2வது நாளாக தொடர் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்றும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. இது தங்க வர்த்தகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை சற்று சரிவில் காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகிறது.

எனினும் இந்த சரிவு தொடருமா? இது வெறும் புராபிட் காரணத்தால் குறைகிறதா? இனி அதிகரிக்குமா? அடுத்தது என்ன நடக்கும்? இனி விலை எப்படி இருக்கும்? டெக்னிக்கலாக எப்படியுள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன என பல கேள்விகள் எழுந்துள்ளன.

தள்ளுபடி விலையில் தங்கம்.. மாதத்தில் முதல் முறையாக சரியான ஆஃபர்.. இனி விலை குறையுமா..?தள்ளுபடி விலையில் தங்கம்.. மாதத்தில் முதல் முறையாக சரியான ஆஃபர்.. இனி விலை குறையுமா..?

சரிவுக்கு என்ன காரணம்

சரிவுக்கு என்ன காரணம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. இது அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவாக காணப்படுகிறது. இதன் எதிரொலியாக தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மத்தியில் பயம்

முதலீட்டாளர்கள் மத்தியில் பயம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது மேற்கொண்டு அதிகரித்து வருகின்றது. இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் ஏற்படும் அதிகப்படியான சரிவினைக் குறைத்துள்ளது.

சந்தை

சந்தை

கூடுதலாக சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தமானது, தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிக சரிவினைத் தடுத்துள்ளது எனலாம். கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று சரிவில் தான் தொடங்கின. இது பெருகி வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் என பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

எப்படியிருப்பினும் பத்திர லாபமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டாலரின் மதிப்பானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது இன்று தங்கம் விலையானது சரிய காரணமாக அமைந்துள்ளது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

சிறந்த பாதுகாப்பு புகலிடம்

சிறந்த பாதுகாப்பு புகலிடம்

சிறந்த பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கமானது, அரசியல் பதற்றங்கள், நிதி நெருக்கடிகள், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்கும் மத்தியில் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியில் தங்கத்தின் தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் தான் நிபுணர்கள் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 11.30 டாலர்கள் குறைந்து, 1803.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியிருந்தாலும், முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சரிவில் தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 1.50% குறைந்து, 25.407 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியிலும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 157 ரூபாய் குறைந்து, 47,896 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 570 ரூபாய் குறைந்து, 67,749 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் குறையும் காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 5 ரூபாய் அதிகரித்து, 4,546 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 36,368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 2 ரூபாய் அதிகரித்து, 4,956 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 39,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 72.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 72,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளி விலையானது தொடர்ந்து சற்று குறைந்து வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். நீண்டகால நோக்கிலும் குறையும் போது வாங்கினால் இன்னும் லாபம் கூடுதலாக கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price today on july 19th, 2021; gold prices remain weak, is it a right time to buy?

Gold price latest updates.. Gold price today on july 19th, 2021; gold prices remain weak, is it a right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X