9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..!

இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிடித்தமான ஒரு உலோகம் எனில், அது தங்கம் தான்.

இந்திய மக்களின் உணர்களில் கலந்துள்ள தங்கத்தினை, தற்போது மக்கள் முதலீட்டு போர்ட்போலியோவிலும் முக்கிய அம்சமாகவே பார்க்கின்றனர்.

தங்கம் விலையானது கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட நிலையில், நீண்டகால நோக்கில் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கும். பழைய உச்சத்தினை உடைக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

முக்கிய சப்போர்ட்டினை உடைத்த தங்கம் விலை

முக்கிய சப்போர்ட்டினை உடைத்த தங்கம் விலை

இந்த நிலையில் சமீபத்திய நாட்களாக தொடர்ந்து தங்கம் விலையானது காலை அமர்வில் ஏற்றம் கண்டாலும், மாலை அமர்வில் மீண்டும் சரிவினைக் கண்டு முடிவடைந்து வருகின்றது. எனினும் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலே இருந்து வந்த தங்கத்தின் விலையானது, கடந்த அமர்வில் 1800 டாலர்களை உடைத்து, 1799.20 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்தில் 1797.35 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 5.35 டாலர்கள் குறைந்து, 1793.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாக இன்று தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.50% குறைந்து, 25.188 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 47,430 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 123 ரூபாய் குறைந்து, 66,998 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் குறைந்து, 4,504 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 36,032 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 17 ரூபாய் குறைந்து, 4,914 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 39,312 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 71.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 71,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே சற்று ஏற்றத்தினை கண்டு வந்த வெள்ளி விலையானது இன்று, மீண்டும் சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை சரியலாம்

தங்கம் விலை சரியலாம்

மீடியம் டெர்மில் தங்கம் மற்றும் வெள்ளின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில வாங்க நினைப்பவர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால், குறைந்த விலையில் வாங்க வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆக இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கலாம்.

ஃபெடரல் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வரலாம்

ஃபெடரல் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் வரலாம்

ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று, மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இது தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரியளவிலான முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர் என்றே கூறலாம்.

ஊக்கத்தொகை அறிவிப்புகள் வருமா?

ஊக்கத்தொகை அறிவிப்புகள் வருமா?

இந்த கூட்டத்தில் ஃபெடரல் வங்கியின் இரு நாள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதில் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்யலாமா? என்ற விவாதமும் நடைபெறலாம். இது குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வருமா என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றது. மொத்தத்தில் தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் இருந்தாலும், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் தங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சப்போர்ட் லெவல்

அடுத்த சப்போர்ட் லெவல்

தங்கம் விலையானது 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட்டாக 1778 டாலர்களாகவும் உள்ளது. ஆக இனி வரும் நாட்களில் தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் அச்சம்

முதலீட்டாளர்கள் அச்சம்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது குறித்து பலவிதமாக கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவும் தங்கம் விலையில் நீண்டகால நோக்கில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன் மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். பல காரணிகளும் தங்கம் விலைக்கு எதிராகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+